குணசேகரன் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளும் இரத்தா? ஏ.ஜி மறுப்பு

கோலாலம்பூர், நவ.7-

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துடனான தொடர்பு காரணமாக, சிரம்பான் ஜெயா சட்டமன்ற உறுப்பினர் பி.குணசேகரன் மீதான இரு குற்றச்சாட்டுகள் இரத்து செய்யப்பட்டது குறித்து சட்டத்துறை (ஏ.ஜி) தலைவர் தோமி தோமஸ் விளக்கம் அளித்துள்ளார்.

குணசேகரன் மீது அதே மாதிரியான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு ஆயுள்சிறை தண்டனையை விதிக்க வழி செய்கின்றது.

எனவே, குணசேகரன் மீது கூடுதலான குற்றச்சாட்டுகளைச் சுமத்துவதற்கான தேவையில்லை. ஆகையால், அவர் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் இரத்து செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுவது பொய். எதிர்வரும் காலங்களில் அத்தகைய குற்றச்சாட்டுகளைச் சுமத்துவதற்கு, தங்களுக்கு தடையாக எதுவும் இல்லை எனவும் தோமி தோமஸ் குறிப்பிட்டார்.

இதனிடையே, முந்தைய குற்றச்சாட்டுகள் தொடர்பில், குணசேகரனுக்கு ஜாமின் கிடைக்காததால், அவர் இன்னமும் விடுவிக்கப்படவில்லை.