புதன்கிழமை, மே 27, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > அரசியல் > ஜாக்கிர் நைக் இந்தியாவிற்கு திருப்பி அனுப்பப்பட மாட்டார்!
அரசியல்முதன்மைச் செய்திகள்

ஜாக்கிர் நைக் இந்தியாவிற்கு திருப்பி அனுப்பப்பட மாட்டார்!

கோலாலம்பூர், நவ. 7-

சர்ச்சைக்குரிய சமய போதகரான டாக்டர் ஜாக்கிர் நைக் மீண்டும் அவரது தாயகமான இந்தியாவிற்கு திருப்பி அனுப்பபட மாட்டார். அந்த நிலைப்பாட்டை, மலேசியா இந்தியாவிற்கு அதிகாரப்பூர்வமான கடிதம் வாயிலாக தெரியப்படுத்துமென வெளியுறவு அமைச்சர் சைபுடின் அப்துல்லா தெரிவித்தார்.

மலேசியாவின் நிலைப்பாடு குறித்து, அதிகாரப்பூர்வ கடிதம் வாயிலாக தெரிவிக்கும்படி, இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் கேட்டுக்கொண்டதற்கிணங்க அக்கடிதம் அனுப்பப்படவிருப்பதாகவும் சைபுடின் கூறினார்.

கடந்த வாரம் கம்போடியாவில் நடைபெற்ற ஆசியான் உச்சநிலை மாநாட்டில், ஜெய்சங்கர் அக்கோரிக்கையை முன்வைத்திருந்தார்.

அவ்வகையில், இந்தியாவிற்கு சரியான பதிலை அனுப்புவது குறித்து சட்டத்துறை தலைவருடன் கலந்துரையாடி வருவதாகவும் சைபுடின் மக்களவையில் குறிப்பிட்டார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன