புதன்கிழமை, மே 27, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > அரசியல் > கம்யூனிஸ்டு, எல்.டி.டி.ஈ குறித்து மக்களவையில் கடும் வாக்குவாதம்!
அரசியல்முதன்மைச் செய்திகள்

கம்யூனிஸ்டு, எல்.டி.டி.ஈ குறித்து மக்களவையில் கடும் வாக்குவாதம்!

கோலாலம்பூர், நவ. 7-

கம்யூனிஸ்டு, தமிழீழ விடுதலைப் புலிகள் விவகாரம் தொடர்பில், மக்களவையில், பக்காத்தான் ஹராப்பான், எதிர்கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் RSN ராயர், கம்யூனிஸ்டு போராட்டங்களைக் கொண்டு வந்தது டிஏபி அல்ல. மாறாக, அம்னோதான் என பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார்.

உதாரணமாக, அம்னோவின் முன்னாள் தலலமைச்செயலாளர் தெங்கு அட்னான் தெங்கு மன்சோர், சீனாவைத் தளமாக கொண்ட கம்யூனிஸ்டு கட்சியின் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துக்கொண்டிருந்ததாக ராயர் கூறினார்.

மேலும், பேசிய அவர், இந்தியாவுடனான அரச தந்திர உறவு சீர்படுத்தப்பட வேண்டுமானால், மலேசிய அரசாங்கம் சர்ச்சைக்குரிய சமய போதகரான டாக்டர் ஜாக்கிர் நைய்க்கை அந்நாட்டிற்கு திருப்பி அனுப்ப வேண்டுமென வலியுறுத்தினார்.

அதன் பிறகு, பாயா பெசார் நாடாளுமன்ற உறுப்பினர் முகமட் ஷாஹார் அப்துல்லா பேசும்போது, குறுக்கிட்ட ஆராவ் நாடாளுமன்ற உறுப்பினரான ஷாஹிடான் காசிம், டிஏபி, கம்யூனிஸ்டு பயங்கராத கும்பலைத் தொடர்புபடுத்தும் புத்தகத்தை காண்பித்து ராயரின் குற்றச்சாட்டுகளை மறுத்தார்.

அதன் பிறகு, அம்னோ, டிஏபி உறுப்பினர்களிடையே வாய்த் தகறாறு ஏற்பட்டது. அவ்விவகாரம் இறுதியில், அமைதிக்கு வர, கோலகங்சார் நாடாளுமன்ற உறுப்பினரான மஸ்துரா முகமட் யாசிட், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் டிஏபியின் இரண்டு சட்டமன்ற உறுப்பினர்கள் தொடர்புபடுத்தப்படுவது, நாட்டின் தோற்றத்திற்கு களங்கத்தை ஏற்படுத்தியிருப்பதாகவும் கூறினார்.

ஆயினும், மஸ்துராவின் கருத்து, நீதிமன்றத்தை அவமதிப்பதாக இருப்பதாக டிஏபியின் உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

அதன் பிறகு, நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்ருவரும் நிலையில், அவ்விவகாரத்தை எழுப்பக்கூடாது என மக்களவை சபாநாயகர் முகமட் அரிப் மாட் யூசோப் வலியுறுத்தினார்.

.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன