திங்கட்கிழமை, ஜூன் 1, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > அரசியல் > ஏ.ஜி-யை அல்ல; எதிர்கட்சி உறுப்பினர்களை நீக்க விரும்புகிறேன்! பிரதமர் பதிலடி
அரசியல்முதன்மைச் செய்திகள்

ஏ.ஜி-யை அல்ல; எதிர்கட்சி உறுப்பினர்களை நீக்க விரும்புகிறேன்! பிரதமர் பதிலடி

கோலாலம்பூர், நவ. 7-

நாட்டின் சட்டத்துறை தலைவர் தோமி தோமஸை நீக்க வேண்டுமென எதிர்கட்சியைச் சேர்ந்தவர்கள் வலியுறுத்திவரும் நிலையில், அதற்கு தாம் அடிபணிய போவதில்லை என பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் தெரிவித்துள்ளார்.

தோமி தோமஸ் நீதிமன்ற விவகாரங்களில் தலையிட்டு, தமது அதிகாரத்தை முறைகேடாக பயன்படுத்தி வருவதால், அவர் சட்டத்துறை தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட வேண்டுமென நாடாளுமன்ற எதிர்கட்சி தலைவர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் இன்று வலியுறுத்தியிருந்தார். அதற்கு பதிலளிக்கையில், பிரதமர் மேற்கண்டவாறு கூறினார்.

சில வேளைகளில், சிலர் தவறுகளைச் செய்யக்கூடும். ஆயினும், அவர்களை நீக்குவது எனது வேலையல்ல. எதிர்கட்சியைச் சேர்ந்தவர்கள்தான் அதிகமான தவறுகளைச் செய்துள்ளனர். அதிலுள்ள சில உறுப்பினர்களைத் தான் தாம் நீக்க விரும்புவதாகவும் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் குறிப்பிட்டுள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன