சனிக்கிழமை, மே 30, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > அரசியல் > டச் அண்ட் கோ விவகாரம்: முடிவை ஆய்வு செய்யுங்கள் -மஇகா இளைஞர் பிரிவு கோரிக்கை
அரசியல்சமூகம்முதன்மைச் செய்திகள்

டச் அண்ட் கோ விவகாரம்: முடிவை ஆய்வு செய்யுங்கள் -மஇகா இளைஞர் பிரிவு கோரிக்கை

சிரம்பான், நவம்பர் 8-

டோல் சாவடிகளில் டச் அண்ட் கோ அட்டையில் பணத்தை சேர்க்கும் பகுதியை (lorong tambah nilai) எடுக்கக் கூடாது  என நெகிரி செம்பிலான் மாநில மஇகா இளைஞர் பிரிவினர் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

டோல் சாவடிகளில் பணத்தை சேர்க்கும் பகுதிகள் செயல்படாது என பிளஸ் நெடுஞ்சாலை நிறுவனம் அறிவித்திருப்பது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு ஒரு தீர்வு கிடைத்தாக வேண்டும் என்ற நோக்கத்தில் அவர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டதாக நெகிரி செம்பிலான் மாநில மஇகா இளைஞர் பிரிவி தலைவர் ரமேஸ் பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

சிரம்பான் வடக்கு தெற்கு நெடுஞ்சாலை அருகே ‘டோல் சாவடிகளில் பணத்தை சேர்க்கும் பகுதியை தொடர்ந்து நிலை நிறுத்துங்கள், வேறு வழியை கையாளுங்கள்’ என பதாகைகளை ஏந்தி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பொது மக்களுக்கு இதில் உடன்பாடு இல்லை என்பதால் பிளஸ் நிறுவனம் இதனை கருத்தில் கொண்டு பணத்தை சேர்க்கும் பகுதிகள் தொடர்ந்து நிலைத்திருக்க நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று செய்தியாளரிடம் அவர் கூறினார்.

அவசர நேரங்களில் குறிப்பாக உடல் நிலை சரியாக இல்லாதவர்கள், கர்ப்பிணி பெண்களை ஏற்றிச் செல்லும்போது டோல் சாவடிகளில் பணத்தை சேர்க்கும் பகுதிகள் இல்லாதது பாதிப்பை ஏற்படுத்தும். அதே வேளையில், மக்கள் டச் அண்ட் கோ அட்டையில் பணம் இருக்கிறதா என்பதை டோல் சாவடிகளில்தான் சரி பார்க்கின்றனர். அவசரமாக பயணத்தை மேற்கொள்பவர்களுக்கு இந்த பணத்தை சேர்க்கும் பகுதிதான் சுலபமாக இருந்தது என்பதை ரமேஸ் சுட்டிக் காட்டினார்.

நெடுஞ்சாலைகளில் இருக்கும் ஆர்&ஆர் ஓய்வெடுக்கும் பகுதியின் கார் நிறுத்துமிடத்திலிருந்து டச் என் கோ பணம் சேர்க்கும் பகுதிக்கு செலவதும் சற்று தொலைவாக உள்ளது.

நாடு முழுவதிலும் 94 டோல் சாவடிகள் உள்ளன. அதில் பணத்தை சேர்க்கும் பகுதிகளில் மட்டும் பணியாளர்கள் இருந்தனர். இனி அவர்களுக்கு வேலையும் பாதிக்கப்படும் என்பதையும் பிளஸ் நிறுவனம் கருத்தில் கொள்ள வேண்டும்.

 கடந்த காலங்களில் பிளஸ்சில் அதிகமான பேர் வேலை செய்தார்கள். இன்று டச் அண்ட் கோ பண சேர்ப்பு பகுதியில் மட்டுமே பணியாளர்களை பார்க்க முடிந்தது தற்போது அதற்கும் வழியில்லாமல் போய்விட்டது.

எனவே, இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு பிளஸ் நெடுஞ்சாலை நிறுவனமும் அரசும் டோல் சாவடிகளில் பணத்தை சேர்க்கும் பகுதியை நிலைத்திருக்க செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி துணை மூத்த மேலாளர் இஸ்கண்டார் சுல்கிப்லியிடம் மகஜரை சமர்ப்பித்ததாகவும் போராட்டத்திற்கு பிறகு நல்ல தீர்வை விரைவில் எதிர்பார்போம் என்று ரமேஸ் நம்பிக்கை தெரிவித்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன