கோலாலம்பூர், நவ.8-

தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்துடனான தொடர்பு எனும் சந்தேகத்தின் அடிப்படையில், தடுத்து வைக்கப்பட்டிருக்கும்  12 பேரில், ஐவர் தாங்கள் துன்புறுத்தப்பட்டிருப்பதாக புகார் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், அவர்களின் புகார்களை கோலாலம்பூர் செஷன் நீதிமன்றம் இன்று கவனத்தில் எடுத்துக்கொண்டது.

கடந்த 1ஆம் தேதி 57 வயதுடைய பி.சுப்ரமணியம், 28 வயதுடைய A.கலைமுகிலன் ஆகிய இருவரிடம் பதிவு செய்யப்பட்ட காணொளி விளக்கத்தைப் பார்வையிட்ட நீதிபதி அஸூரா அல்வி, குற்றவியல் நடைமுறை சட்டத்தின் 133 பிரிவின் கீழ், அப்புகார்கள் மீது டிசம்பர் 5 மற்றும் 6 ஆகிய தேதிகளில், அவ்விருவரிடம் பரிசோதனை மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளார்.

இதனிடையே, சுப்ரமணியத்தின் வழக்கறிஞர் S.செல்வம் கூறுகையில், சாட்சிகள் வழங்கிய புகாரில் உண்மைத்தன்மை இருப்பதை நீதிபதி நம்புவதை அம்முடிவு காட்டுவதாக தெரிவித்துள்ளார்.