சனிக்கிழமை, மே 30, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > அரசியல் > சிலாங்கூர் மாநில வரவு செலவு திட்டத்தில் இந்திய சமுதாயத்திற்கு அதிக முன்னுரிமை -கணபதி ராவ்
அரசியல்சமூகம்முதன்மைச் செய்திகள்

சிலாங்கூர் மாநில வரவு செலவு திட்டத்தில் இந்திய சமுதாயத்திற்கு அதிக முன்னுரிமை -கணபதி ராவ்

ஷா ஆலம், நவம்பர் 8-

அடுத்த ஆண்டுக்கான மாநிலத்திற்கான வரவு செலவு திட்டத்தில், இந்திய சமுதாயத்திற்காக அதிக மானியங்களை ஒதுக்கியதில் இதர மாநிலங்களை காட்டிலும் சிலாங்கூர் மாநிலம் முன்னிலை வகிக்கிறது. மாநில ரீதியில் அரசாங்கம் கொடுப்பதை நேர்மையாகவும் இருந்தால் மட்டுமே இந்த நிலையை தொடர்ந்து தக்க வைத்துக்கொள்ள முடியும் என்று சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர், வி. கணபதி ராவ் தெரிவித்தார்.

தமிழ்ப்பள்ளிகளுக்கு வெ. 50 லட்சம், ஆலயங்களுக்கு வெ. 17 லட்சத்து 70 ஆயிரம், மற்றும் இந்திய தொழில் முனைவர்களுகாக வெ. 10 லட்சங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

பி40 பிரிவினரின் தேவைகளுக்கு இம்முறை வரவு செலவு திட்டத்தில் அதிக முன்னுரிமை வழங்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

ஷா ஆலாமில் உள்ள மாநில சட்டமன்ற கட்டிட வளாகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கணபதி ராவ் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இந்தியர்களின் வளர்ச்சிக்கு கல்வி முக்கியம் என்பதால் அதில் பிரச்னை ஏதும் இருக்கக்கூடாது என்பதால் தாம் மிகவும் கவனமாக இருப்பதாக கணபதி ராவ் கூறினார். இந்திய மாணவர்களின் கல்வி தேவைகளுக்கு இந்த வரவு செலவு திட்டத்தில் பெரும் தொகை ஒதுக்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

அதேவேளையில் தமிழ்ப்பள்ளி விவகாரங்களில், அரசியல் குறுக்கீடுகள் இல்லாமல் இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பதாகவும் அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.

2014-ஆம் ஆண்டில் தாம் தொடங்கிய பேருந்து உதவி திட்டத்திற்கு, மக்களின் பேராதரவுடன் ஒவ்வோர் ஆண்டும் அதிகரித்து வருவதாக அவர் கூறினார்.

அதோடு,  தீபாவளி, பொங்கல் என பண்டிகை காலங்களுக்கும் சேர்த்து 5 லட்சங்கள் தனியாக மாநியம் வழங்கபட்டுள்ளது.  எனவே, நம் சமுதாயத்தினர் இதனை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன