ஞாயிற்றுக்கிழமை, பிப்ரவரி 23, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > அரசியல் > மனிதவள அமைச்சில் மணியம் ஆறுமுகம் துணைத் தலைமைச் செயலாளராக நியமனம்
அரசியல்சமூகம்முதன்மைச் செய்திகள்

மனிதவள அமைச்சில் மணியம் ஆறுமுகம் துணைத் தலைமைச் செயலாளராக நியமனம்

புத்ராஜெயா, நவ.9-

மலேசிய மனிதவள அமைச்சின் உயர் அதிகார பொறுப்பான துணைத் தலைமைச் செயலாளர் பதவிக்கு திரு.மணியம் ஆறுமுகம் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் கொள்கை மற்றும் அனைத்துலக பிரிவிற்கு மிக முக்கிய பொறுப்பை ஏற்றுள்ளார்.

கடந்த 26 ஆண்டுகளாக மலேசிய பாதுகாப்பு அமைச்சில் பணிபரிந்து வந்தவர் மணியம். மேலும் மம்பு மலேசியா (MAMPU Malaysia) எனும் மலேசிய நவீனமய நிர்வாக மற்றும் மேலாண்மை திட்ட பிரிவிலும் பணியாற்றியுள்ளார்.

மணியம் ரொம்பின், நெகிரி செம்பிலான் மாநிலத்தில் பிறந்து தமிழ்ப்பள்ளியில் கல்வி கற்றவர். கடந்த நவம்பர் 8 வெள்ளிக்கிழமை காலை புத்ராஜெயா மனிதவள அமைச்சில் தலைமைச் செயலாளர் டத்தோ அமிர் ஒமாரிடம் நியமன கடித்தைப் பெற்று அதிகாரப்பூர்வமாக தம் பொறுப்பை ஏற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன