ஞாயிற்றுக்கிழமை, பிப்ரவரி 23, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > அரசியல் > தொடர்ந்து மூன்றாவது முறையாக புத்தகத்தின் புது புத்தகங்கள் வெளியீடு கண்டன
அரசியல்சமூகம்முதன்மைச் செய்திகள்

தொடர்ந்து மூன்றாவது முறையாக புத்தகத்தின் புது புத்தகங்கள் வெளியீடு கண்டன

கோலாலம்பூர், நவம்பர் 9-

புத்தாக்கத் தமிழ் மொழியியல் கழகம் (புத்தகம்) கடந்த மார்ச் மாதம் ‘மொழி, மொழியியல் & சமுதாய அறிவியல்  மூன்றாவது பன்னாட்டு மாநாட்டை கோயம்புத்தூர், தமிழ் மொழியியல் சங்கத்தின் ஆதரவோடு வெற்றிகரமாக நடத்தியது.

மலேசியா, சிங்கப்பூர், சவூதி அரேபியா, தென் ஆப்பிரிக்கா இந்தோனேசியா நாடுகளில் இருந்தும் இந்தியாவின் தமிழ் நாடு, ஆந்திரா, கேரளா, கர்நாடகம், ஜார்கண்ட் போன்ற பல்வேறு மாநிலங்களில் இருந்து படைப்பாளர்கள் இம்மாநாட்டுக்குக் கட்டுரைகளை அனுப்பியிருந்தனர்.

இங்கே படைக்கப்பட்ட ஆய்வுக் கட்டுரைகள் யாவும் நான்கு நூல்களாகப் பிரித்து ISBN எண்களோடு இன்று வெளியீடு கண்டுள்ளன. புத்தாக்கத் தமிழ் மொழியியல் கழகப் பதிப்பகம் இந்நூல்களை வெளியீடு செய்துள்ளது.

இவ்வாண்டு இரு நூல்கள் தமிழிலும் இரு நூல்கள் ஆங்கிலத்திலும் வெளியிடப்பட்டுள்ளன. அவை தமிழ் மொழியியலில் புதிய பார்வை, தமிழ்மொழிக் கற்றல் கற்பித்தலிலும் இலக்கியத்திலும் தற்கால சிந்தனை, Emerging Trends in Multi Languages & Linguistics, Recent Advancements in Education & Social Sciences ஆகிய தலைப்புகளாகும்.

கடந்த ஆண்டு இதே போல் இரண்டு நூல்கள் தமிழிலும் மூன்று நூல்கள் ஆங்கிலத்திலும் இப்பதிப்பகம் புத்தகத்தின் சார்பாக வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. இந்நூல்கள் அனைத்தும் புத்தகத்தின் அதிகாரப்பூர்வ அகப்பக்கமான talias.orgஇல் இலவசமாகப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என அக்கழகத்தின் தோற்றுனரும் தலைவருமான முனைவர் முனீஸ்வரன் குமார் தெரிவித்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன