கோலாலம்பூர், நவ.11-
நாடே ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த எஸ்.ஆர்.சி நிறுவனம் தொடர்பான வழக்கில் தற்காப்புவாதம் புரியும்படி முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக்கிற்கு கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
எஸ்.ஆர்.சி-க்கு சொந்தமான 42 மில்லியன் ரிங்கிட்டை உட்படுத்திய விவகாரத்தில், அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியது, கள்ள பணபறிமாற்றம் என நஜீப் மீது சுமத்தப்பட்டுள்ள 7 குற்றச்சாட்டுகளில் அவர் தற்காப்பு வாதத்தை புரிய வேண்டும்.
அவ்வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞர்கள் போதிய ஆதாரத்தை முன்வைத்ததைத் தொடர்ந்து நீதிபதி முகமட் நஸ்லான் முகமட் கசாலி அந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
இவ்வழக்கில் நஜீப் மீதான விசாரணை டிசம்பர் மாதம் 3,4,9 முதல் 12, 16 முதல் 19 ஆகிய தேதிகளில் நடைபெறும் எனவும் நீதிபதி அறிவித்துள்ளார்.