தமிழ்ப்பள்ளிகளை மூடுவதற்கு செய்திருந்த வழக்கு தள்ளுபடி

0
4

புத்ராஜெயா, நவ.11-

தமிழ்ப்பள்ளிகள் உள்பட தாய்மொழி பள்ளிகள் கூட்டரசு அரசியலைமைப்பிற்கு எதிராக இருப்பதாகவும் அதனை மூட வேண்டும் என்றும் செய்யப்பட்டிருந்த வழக்கை புத்ராஜெயாவிலுள்ள கூட்டரசு நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

கல்வி தொடர்பான சட்டங்களை வரையும் அதிகாரம் நாடாளுமன்றத்திற்கே இருப்பதாக கூறி, மலாயா தலைமை நீதிபதி அசாஹார் முகமட், வழக்கறிஞர் முகமட் கைருல் அசாம் அப்துல் அசிஸ் செய்திருந்த அவ்வழக்கை தள்ளுபடி செய்தார்.

மேலும், தாய்மொழி பள்ளிகள் ஏற்பட்டுள்ளது குறித்து வழக்கு தொடுப்பதற்கான இடம் கூட்டரசு நீதிமன்றம் அல்ல. மாறாக, உயர்நீதிமன்றமே தாய்மொழி பள்ளிகள் தொடர்பான சட்ட விவகாரங்கள் குறித்து, செவிமடுக்கும் எனவும் நீதிபதி தெளிவுபடுத்தியுள்ளார்.

அதனால், கூட்டரசு அரசியலைப்பின் பிரிவு 4(4)-இன் கீழ் அவ்வழக்கு தொடுக்கப்பட்டிருப்பது சரி அல்ல எனவும் நீதிபதி குறிப்பிட்டார்.