திங்கட்கிழமை, டிசம்பர் 16, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > அரசியல் > அமைச்சர் சேவியர் ஜெயக்குமாருக்கு டத்தோ விருது
அரசியல்சமூகம்முதன்மைச் செய்திகள்

அமைச்சர் சேவியர் ஜெயக்குமாருக்கு டத்தோ விருது

கோலாலம்பூர், நவ.11-

கிளந்தான் மாநில சுல்தான் ஐந்தாம் முகமது (Muhammad V) பிறந்தநாளை முன்னிட்டு நீர், நில இயற்கைவளத்துறை அமைச்சர் டாக்டர் சேவியர் ஜெயகுமாருக்கு டத்தோ விருது வழங்கப்பட்டுள்ளது.

பி.கே.ஆரின் உதவித்தலைவரான டாக்டர் சேவியர் ஜெயக்குமார், சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினராகவும் இருந்துள்ளார்.

கடந்த பொதுத்தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் மத்திய அரசாங்கத்தைக் கைப்பற்றிய பின்னர், அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள அவர், தனது கடமையைத் திறம்பட கையாண்டு வருகின்றார்.

இவ்வேளையில், டத்தோ டாக்டர் சேவியர் ஜெயக்குமார், டத்தின் சீலா தேவராஜ் ஆகிய இருவருக்கும் அநேகன் செய்தி இணையத்தள பதிவேடு வாழ்த்துகளைக் கூறிக்கொள்கின்றது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன