மகாதீரின் மரணம் மகிழ்ச்சியாகக் கொண்டாடப்படும்! லொக்மான் அடாம்!

கோலாலம்பூர், நவ.11-

முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீன் துன் ரசாக்கின் நீதிமன்ற வழக்குகளில், நடப்பு பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட்டின் தலையீடு இருப்பதாக, அம்னோவின் உச்சமன்ற உறுப்பினரான லொக்மான் அடாம் குற்றம் சாட்டியுள்ளார்.

அவர் இறந்தால், மரணத்தை மகிழ்ச்சியாக கொண்டாடப்பட்ட முதலாவது பிரதமராகவும் அவர் இருப்பார் எனவும் லொக்மான் கடுமையாக சாடியுள்ளார்.

மகாதீர் இறக்கும் வரையில் அவரது கொடுங்கோன்மை ஓயாது என இன்று எஸ்.ஆர்.சி.வழக்கின் முடிவைக் கண்டறிய கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்திற்கு வந்திருந்த லொக்மான் அடாம் குறிப்பிட்டார். ”நான் நீதிமன்ற முடிவை செவிமடுக்க வரவில்லை.” ”இம்முடிவு பற்றி எங்களுக்கு எப்போதோ தெரியும்.”

இந்த வழக்கை பார்வையிட்டு வந்ததில், அரசு தரப்பு சாட்சிகள் ஜோ லோதான் அனைத்து உத்தரவுகளையும் வழங்கினார் என்று கூறியிருந்தது நமக்கு தெளிவாக தெரியும். நஜீப்பின் வங்கி கணக்கில் நிக் ஃபைசால் அரிஃப் காமில் பணத்தை செலுத்தியதாகவும் சாட்சிகள் கூறியுள்ளன.

இன்று வரையில் ஜோ லோ, நிக் ஃபைசால், வெளிநாட்டிலிருந்து கிடைத்த நான்கு கடிதங்கள் அடிப்படையில் பணத்தை நஜீப்பின் வங்கிக்கணக்கில் செலுத்த அனுமதியளித்த ஸெத்தி அக்தார் அஸிஸ் ஆகியோரை சாட்சிகளாக அழைக்காதது தெரிய வந்துள்ளது.

மகாதீரின் தலையீடு மட்டும் இல்லை என்றால், இந்த வழக்கு எப்போதோ தள்ளுபடி செய்யப்பட்டிருக்கும் எனவும் லொக்மான் அடாம் கூறியுள்ளார்.