வெள்ளிக்கிழமை, டிசம்பர் 6, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > சமூகம் > ஆட்சி மாற்றம் நிகழும் – டத்தோஸ்ரீ தனேந்திரன்
சமூகம்முதன்மைச் செய்திகள்

ஆட்சி மாற்றம் நிகழும் – டத்தோஸ்ரீ தனேந்திரன்

கோலாலம்பூர், நவம்பர் 11-

அடுத்த 15ஆவது பொதுத் தேர்தலில் நிச்சயம் ஆட்சி மாற்றம் நிகழும் என்று மலேசிய மக்கள் சக்தி கட்சியின் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஆர்.எஸ்.தனேந்திரன் தெரிவித்தார்.

கடந்த 14ஆவது பொதுத் தேர்தலில் நடப்பு அரசாங்கம் கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாததால் மக்கள் அதிருப்தியில் உள்ளனர். இதனால், அடுத்த பொதுத் தேர்தலில் தேசிய முன்னணி ஆட்சியை பிடிப்பதற்கு வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாக அவர் கூறினார்.

சிலிம் ரீவர், கம்போங் பாரு மீனாட்சி அம்மன் ஆலயம் அருகே நடைபெற்ற மக்கள் சக்தி கட்சியின் தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பின்போது செய்தியாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக்கும், அம்னோ தலைவரும் முன்னாள் துணைப் பிரதமரும் டத்தோஸ்ரீ அஹ்மட் ஸாஹிட் ஹமிடு கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அவர்கள் அடுத்த பொதுத் தேர்தலில் தேசிய முன்னணி நிச்சயம் ஆட்சியை கைப்பற்றும் என்று டத்தோஸ்ரீ நஜீப் நம்பிக்கை தெரிவித்தார். மக்கள் இன்னமும் தேசிய முன்னணி மீது வைத்திருக்கும் ஆதரவை பார்க்கும் போது அதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளதாக அவர் கூறியதை தாம் வரவேற்பதாக டத்தோஸ்ரீ தனேந்திரன் கூறினார்.

ஆட்சியில் இல்லாவிட்டாலும் தேசிய முன்னணி மீதான பற்றும் விஸ்வாசமும் தொடர்ந்து நிலைத்திருக்கும். தேசிய முன்னணி ஆட்சியிலிருக்கும் போது நாட்டிற்கும் மக்களுக்கு பல நல்ல திட்டங்களை மேற்கொண்டு வந்தது. குறிப்பாக தமிழ்ப்பள்ளிகள், ஆலயங்களுக்கு மானியங்கள், இந்திய வர்த்தகர்களுக்காக ஒதுக்கீடு என இந்தியர்களுக்காக நன்மைகளையே செய்தது என்பதை மறுக்க முடியாது. அப்போது தேசிய முன்னணியின் தோழமை கட்சியாக இருந்தது எந்தளவிற்கு ஆதரவும் ஒத்துழைப்பும் வழங்கினோமோ அதைவிட அதிகமாகவே இப்போதும் ஆதரவு வழங்கி வருகிறோம் என்றும் அவர் சொன்னார்.

கடந்த 11 ஆண்டுகளாக இந்த தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பை செய்து வருவதாகவும் இவ்வாண்டுதான் சீனர், மலாய்க்காரர்கள் உட்பட 6,000 மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டதாகவும் அவர் தெரிவித்தார்.

வாக்குறுதிகள் நிறைவேற்றாதது, பொருட்களின் விலைகள் உயர்வு, செம்பனை,ரப்பர்களின் விலைகள் அதிகரிப்பு, வேலையில்லா திண்டாட்டம் என பல பிரச்னைகளே ஆட்சி மாற்றம் காணுவதற்கான அறிகுறியாக உள்ளது என்று அவர் கருத்துரைத்தார்.

மலேசிய இந்திய காங்கிரஸ் கட்சியுடன் தேசிய முன்னணியின் தோழமைக் கட்சிகள் இணைந்து செயல்பட வேண்டும் என்று அதன் தலைவர் டான்ஸ்ரீ விக்னேவரன் அண்மையில் கூறியிருந்தார். இந்திய சமுதாயத்தின் வளர்ச்சிக்கு இந்தக் கூட்டணி நன்மையை கொண்டு வரும் என்றால் தமது கட்சி இணைந்து செயல்பட தயாராய் இருப்பதாக அவர் கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன