நஜீப் வழக்கில் தமது தலையீடா? ஆதாரத்தைக் காட்டுங்கள்! -பிரதமர் சவால்

0
3

புத்ராஜெயா, நவ.12-

எஸ்.ஆர்.சி. இண்டர்நேஷ்னல் நிறுவனத்தின் நிதியை தவறாக பயன்படுத்தியதாக முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் மீது சுமத்தப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுகளில், தமது தலையீடு இல்லை எனவும் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் கூறியுள்ளார்.

முன்னதாக, நஜீப் மீதான வழக்கில், துன் மகாதீர் தலையிடுவதாக நஜீப்பின் தீவிர விசுவாசியும் அம்னோவின் உச்சமன்ற உறுப்பினருமான டத்தோ லொக்மான் அடாம் குற்றம் சாட்டியிருந்தார்.

அது குறித்து பதிலளிக்கையில், துன் மகாதீர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

லொக்மான் அடாமினால் நிரூப்பிக்க முடியும் என்றால் அவர் அக்குற்றச்சாட்டுகளை தன் மீது சுமத்தலாம் என என்றாரவர்.