சனிக்கிழமை, டிசம்பர் 7, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > அரசியல் > பேராக் டி.ஏ.பி. மீதான கருத்து; மந்திரி பெசார் மன்னிப்பு கேட்க வேண்டியதில்லை! துன் மகாதீர்
அரசியல்முதன்மைச் செய்திகள்

பேராக் டி.ஏ.பி. மீதான கருத்து; மந்திரி பெசார் மன்னிப்பு கேட்க வேண்டியதில்லை! துன் மகாதீர்

புத்ராஜெயா, நவ.12-

பேராக்கில் மலாய்க்காரர்களின் நிலங்களையும் சமயத்தையும் தற்காப்பதற்காக டி.ஏ.பி.யிடம் தனி ஒருவராக தாம் போராடுவதாக அம்மாநிலத்தின் மந்திரி பெசார் அஹ்மாட் ஃபைசால் அசுமூ கூறியிருந்தது பெரும் சர்ச்சையானது.

அவர் அவ்வாறு கூறும் காணொளி பெரும் வைரலானதைத் தொடர்ந்து, அஹ்மாட் ஃபைசால் அசுமூ மன்னிப்பு கேட்க வேண்டுமென பேராக் டி.ஏ.பி வலியுறுத்தியிருந்தது.

இந்நிலையில், அஹ்மாட் ஃபைசால் அசுமூவை பிரதமரும் பெர்சாத்து கட்சியின் தலைவருமான துன் டாக்டர் மகாதீர், தற்காத்து பேசியுள்ளார்.

பேராக்கின் நடப்பு சூழ்நிலை குறித்து கோபத்தில் இருந்த மீனவர்களிடம் பேசும்போது அஹ்மாட் ஃபைசால் அசுமூ அவ்வாறு கூறியுள்ளார். காரணம், பேராக்கை டி.ஏ.பி.தான் வழிநடத்துவதாக அந்த மீனவர்கள் கருதியிருந்தனர். அங்கு தாம் மட்டுமே பெர்சாத்து கட்சியைச் சேர்ந்தவன். மற்றவர்கள் அனைவரும் டி.ஏ.பி.யைச் சேர்ந்தவர்கள். ஆயினும், தாம் மந்திரி பெசாராக மாநிலத்தை வழிநடத்துவதாக அவர் அந்த மீனவர்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டியிருந்ததாக துன் மகாதீர் கூறியுள்ளார்.

இதனிடையே, தாம் கூறியதில் தவறேதும் இல்லை. அதற்காக தாம் மன்னிப்பு கேட்கப் போவதில்லை என அஹ்மாட் ஃபைசால் அசுமூ திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன