பிரேசர் மலை தமிழ்ப்பள்ளிக்கு டத்தோஸ்ரீ ஜி.வி நாயர் வெ.15,000 நிதியுதவி

0
7

பூச்சோங், நவம்பர் 12-

தமிழ்ப்பள்ளிகளுக்காக திரட்டப்பட்ட நிதியிலிருந்து வெ.15,000யை பிரேசர் தமிழ்ப்பள்ளிக்கு தொழிலதிபரும் சமூக சேவையாளருமான டத்தோஸ்ரீ ஜி.வி.நாயர் வழங்கினார்.

தன்னுடைய 60ஆம் ஆண்டு பிறந்தநாள் விழாவில் திரட்டப்பட்ட நிதியில் ஒரு பகுதியை அத்தமிழ்ப்பள்ளிக்கு வழங்கினார்.

இது குறித்து அவர் கூறுகையில், நம் வர்த்தக துறையில் வளர்ச்சியடைந்தவர்கள் பலர் உள்ளனர். அவர்கள் தமிழ்ப்பள்ளிகளுக்கு நன்மை ஏற்படும் வகையில் உதவிகள் செய்தால் அப்பள்ளிக்கு ஓர் ஊக்குவிப்பாக அமையும் என்று அவர் கூறினார்.

இந்நிலையில், தமிழ்ப்பள்ளிகளுக்கு எதாவது சிறப்பு செய்ய வேண்டும் என்ற நோக்கில் அவரது பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்ட பிரமுகர்களிடம் தலா வெ.100 வழங்கும்படி கேட்டுக் கொண்டார். அவ்வாறு திரட்டியதில் கிடைத்த வெ.31,000யிலிருந்து வெ.15,000யை பிரேசர் மலை தமிழ்ப்பள்ளிக்கு ஒதுக்கப்பட்டது.

ஞாயிற்றுக்கிழமை பூச்சோங்கில் உள்ள வாழை இலை உணவகத்தில் நடைபெற்ற சிறப்பு பிராத்தனைக்கு பின்னர் அத்தொகைக்கான காசோலையை சம்பந்தப்பட்ட பள்ளியின் பிரதிநிதியிடம் ஒப்படைக்கப்பட்டது.

மீதமுள்ள நிதியை அடுத்த எந்தெந்த பள்ளிக்கு வழங்கப்போவது குறித்த விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.