கோலாலம்பூர், நவம்பர் 12

நெட்டிஜென் எனும் நிகழ்வினை மலேசிய அறிவியல் பல்கலைகழகத்தில் பயிலும் தொடர்புத்துறை, நான்காம் ஆண்டு மாணவர்கள் நடத்துகின்றனர். இந்த திட்டப்பணி சுய சரிபார்ப்பு, சுய நடவடிக்கைகளைச் சமூக வலைத்தகங்களில் பகிர்வது,இணையப் பகடி, மற்றும் இணையப் பாதுகாப்பு என நான்கு முக்கிய கூறுகளை மையமாகக் கொண்டு நடைபெறுகிறது.

கடந்த அக்டோபர் 14ஆம் தேதி மலேசிய அறிவியல்  பல்கலைகழகத்தில் அதிகாரப்பூர்வமாக ஆரம்பமானது. இந்நிகழ்வில் பல்கலைகழக மாணவர்களைக் கவரும் வகையில் நிறைய சுவாரிசியமான நடவடிக்கைகள் நடத்தப்பட்டன.

மேலும் ஞாயிற்றுக்கிழமை 10ஆம் தேதி ‘NETiGEN Road Show’ பினாங்கு ஜார்ஜ்டவுனிலும் திங்கட்கிழமை 11ஆம் தேதி மலேசிய அறிவியல் பல்கலைகழகத்தில் இணையப் பாதுகாப்பின் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் ஒரு கருத்தரங்கும் நடைப்பெற்றது. இறுதியாக, நிகழ்வின் நிறைவாக Fam-Net Day’ எனும் குடும்ப விழா வருகின்ற நவம்பர் 24ஆம் தேதி பினாங்கில் உள்ள ‘Youth Park’-யில் நடைப்பெறவுள்ளது.

இந்நிகழ்விற்குப் பினாங்கு வாழ் சுற்று வட்டார மக்கள் கலந்து கொண்டு ஆதரவு நல்குமாறு செயல்குழு உறுப்பினர்கள் கேட்டுக்கொள்கிறார்கள்.இந்நிகழ்வின் மேல்விபரங்கள் அறிய முகநூல் (NETiGEN-Networking Informative Generation) மற்றும் படவரி  (netigenusm) அகப்பக்கத்தை வலம் வரலாம்.