சித்தார்த் கேத்தரின் தெரேசா, சதீஷ், ஆடுகளம் நரேன், மயில்சாமி, மனோபாலா ஆகியோர் நடிப்பில் ஆக்சன் த்ரில்லராக உருவாகியுள்ள ‘அருவம்’ திரைப்படத்தைத் தற்போது ஆஸ்ட்ரோ பர்ஸ்ட் அலைவரிசை 488-இல் கண்டு களிக்கலாம்.

இத்திரைப்படத்தில் உணவு பாதுகாப்புத்துறையின் அதிகாரியாக வலம் வரும் சித்தார்த் உணவில் கலப்படம் செய்பவர்களைந்த் தேடி கண்டுபிடித்து தண்டனை வாங்கித் தருகிறார். மிகவும் கண்டிப்பான அதிகாரியான சித்தார்த் அதே ஊரியில் ஆசிரியராக சமூக சேவைகளைச் செய்து வரும் கதாநாயகி கேத்ரின் தெரசாவைக் காதலிக்க ஆரம்பிக்கிறார்.

இதற்கிடையில், சித்தார்த்தின் செயலால், உணவில் கலப்படம் செய்யும் நபர்களின் வியாபாரம் பாதிக்கப்பட, அவர்கள்  சித்தார்த்தைக் கொலைச் செய்து விடுகின்றார்கள். இறந்த சித்தார்த், காதலி கேத்ரின் தெரசா மூலமாக பழி வாங்க தொடங்குகிறார்.

கேத்ரின் தெரசா அவர்களைக் கண்டுபிடித்து எவ்வாறு பழி வாங்குகிறார் என்பதுதான் இத்திரைப்படத்தின் மீதிக்கதையாகும். இதனை அறிந்து கொள்ள, இப்பொழுதே ‘அருவம்’ திரைப்படத்தை வாங்கி ஆஸ்ட்ரோ பர்ஸ்ட் அலைவரிசை 488-இல் கண்டு களியுங்கள்.

அதுமட்டுமின்றி, அண்மையில் ஆஸ்ட்ரோ பர்ஸ்ட் அலைவரிசையில் ஒளியேறிய பிரபாஸ், ஷ்ரத்தா கபூர், அருண் விஜய், ஜாக்கி ஷெராஃப் ஆகியோர் நடித்த ‘சாஹோ’, ஜோதிகா மற்றும் ரேவரி நடிப்பில் வெளிவந்த ‘ஜாக்பாட்’, அமலாபால் நடிப்பில் வெளிவந்த ஆடை, நயன்தாரா முதன்மை கதாபாத்திரமாகக் கொண்ட ‘கொலையுதிர் காலம்’, உள்ளூர் திரைப்படம் ‘அழகிய தீ’ ஆகிய திரைப்படங்களைத் தற்போது ஆன் டிமாண்ட் சேவையில் கண்டு மகிழலாம்.