தமிழ்ப்பள்ளிகளுக்கு எதிராக மீண்டும் வழக்கு?

0
2

கோலாலம்பூர், நவ. 13-

நாட்டிலுள்ள தமிழ்ப்பள்ளிகள் உள்பட தாய்மொழி பள்ளிகள், கூட்டரசு அரசியலைப்பு ரீதியாக சட்டபூர்வமானதாக இருக்கின்றதா? என்பதை அறிவிக்கக்கூறி, வழக்கறிஞர் முகமட் கைருல் அசாம் அப்துல் அசிஸ் தொடுத்திருந்த வழக்கை, கூட்டரசு நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தது.

இந்நிலையில், அப்பள்ளிகளுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் விரைவில் சிவில் வழக்கைப் பதிவு செய்யவிருப்பதாக அந்த வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

1996ஆம் ஆண்டு கல்வி சட்டத்தின் செக்ஷன் 28 மற்றும் செக்ஷன் 17 கூட்டரசு அரசியலைமைப்பு சட்டத்துடன் முரணாக இருக்கின்றதா இல்லை என்பது தொடர்பான சட்டவிவகாரம் குறித்து முடிவெடுக்கும் அதிகாரத்தை உயர்நீதிமன்றமே கொண்டிருப்பதாக முகமட் கைருல் அசாம் கூறியுள்ளார்.

எனவே, கோலாலம்பூர், ஜாலான் டூத்தாவிலுள்ள உயர்நீதிமன்றத்தில் சிவில் வழக்கைப் பதிவும் செய்யும்படி தனது வழக்கறிஞர் குழுவிற்கு தாம் உத்தரவிட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தாய்மொழிப்பள்ளிகள் மலேசியாவின் பன்முகத்தன்மையைக் காட்டுவதால், அப்பள்ளிகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடுப்பதை அனைத்து தரப்பினரும் நிறுத்திக்கொள்ள வேண்டுமென துனைக்கல்வியமைச்சர் தியோ நிங் சிங் கூறியிருந்தார்.

இந்நிலையில், முகமட் கைருல் அசாம் தமது அடுத்தக்கட்ட நடவடிக்கையாக அந்த அறிவிப்பை செய்துள்ளார்.