மலேசிய புலிகளின் பாதுகாப்பிற்கு ஏர் ஆசியா நிறுவனம் ஆதரவு

0
11

கோலாலம்பூர், நவ 13-

மலேசிய புலிகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற நோக்கில் மலேசிய புலிகளைக் காப்போம் எனும் பிரச்சாரத்தை இன்று அறிமுகப்படுத்தியது. அந்த பிரச்சாரத்திற்கு ஆதரவாக ‘மலேசிய புலிகளைக் காப்போம்’ எனும் தலைப்பில் ஓர் ஏர் ஆசிய விமானத்தையும் இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது.

இந்தப் பிரச்சாரத்திற்கு மக்கள் ஆதரவு தெரிவிப்பதற்கு இது ஓர் ஊக்குவிப்பாக அமையும் என்பதற்காக இந்த விமானத்தை வெளியிட்டது.

மலேசிய புலிகளின் படங்களால் அமைக்கப்பட்ட அந்த A320 விமானத்தை நீர், நிலம், இயற்கைவள அமைச்சர் டத்தோ டாக்டர் சேவியர் ஜெயக்குமார், ஏர் ஆசியா குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டோனி பெர்னாண்டர்ஸ், மலேசிய ஏர் ஆசியாவின் தலைமை நிர்வாக அதிகாரி ரியாட் அஸ்மாட் ஆகியோர் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டனர்.

புலி நமது நாட்டின் அடையாளம், இது நம் நாட்டின் அடையாளமாக மட்டுமல்லாமல் இதனை பாதுகாப்பதில் நமது பங்கும் இருக்க வேண்டும் என ஏர் ஆசியா குழுமத்தின் உலகளாவிய விவரங்கள் மற்றும் நிலைத்தன்மையின் தலைவர் ஷாஷா ரிட்சாம் தெரிவித்தார். இந்தத் திட்டத்தால் புலிகளுக்கான பாதுகாப்பு அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளதாக அவர் தெரிவித்தார்.

 

ஏர் ஆசியா குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டோனி பெர்னாண்டர்ஸ் கூறுகையில், மலேசிய புலிகளின் பாதுகாப்பிற்காக நீர்,நிலம், இயற்கைவள அமைச்சு மேற்கொண்டிருக்கும் இந்த முயற்சி பாராட்டுக்குரியது. இதில் ஏர் ஆசியாவின் பங்கும் இருப்பது பெருமையாக இருப்பதாக அவர் தெரிவித்தார்.

இந்த திட்டத்திற்கு ஏர் ஆசியா ஆதரவு வழங்கியதற்கு டத்தோ டாக்டர் சேவியர் அமைச்சின் சார்பில் தமது மனமார்ந்த நன்றிகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொண்டார். நம் நாட்டின் தேசிய மிருகமாக விளங்கும் புலியின் இனம் அழிந்துக் கொண்டு வருகிறது. எனவே, புலிகளை பாதுகாப்பது நமது கடமையாகும் என்று கூறினார்.