வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 10, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > அரசியல் > பத்து தொகுதி: தியான் சுவாவிற்கு வழி விடுகிறாரா பிரபாகரன்?
அரசியல்முதன்மைச் செய்திகள்

பத்து தொகுதி: தியான் சுவாவிற்கு வழி விடுகிறாரா பிரபாகரன்?

கோலாலம்பூர், நவ.14-

கடந்த 14ஆவது பொதுத்தேர்தலில், பி.கே.ஆரின் உதவித் தலைவர் தியான் சுவா பத்து தொகுதியில் போட்டியிடுவதற்கான தகுதியை இழந்திருப்பதாக, மலேசிய தேர்தல் ஆணையம் அறிவித்தது செல்லாது என அண்மையில் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தது.

இந்நிலையில், தியான் சுவாவிற்கு வழிவிடும் வகையில், பத்து தொகுதியின் நடப்பு நாடாளுமன்ற உறுப்பினரான பி.பிரபாகரன் அப்பொறுப்பிலிருந்து விலக வேண்டுமென, அத்தொகுதியைச் சேர்ந்த 14 அரசு சார்பற்ற இயக்கங்கள் அடங்கிய குழு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

கடந்த பொதுத்தேர்தலில் போட்டியிட முடியாமல் போனதால், சுயேட்சையாக போட்டியிட்ட 22 வயதான பிரபாகரனுக்கு தியான் சுவாவும் பி.கே.ஆர் உள்பட பக்காத்தான் ஹராப்பானும் ஆதரவளித்தது. பலம் வாய்ந்த தேர்தல் பணிக்குழு வாயிலாக, பிரபாகரன் பெரும்பான்மை வாக்குகளில் வெற்றி பெற்றார்.

இதனிடையே, இவ்விவகாரம் குறித்து தியான் சுவாவிடம் வினவப்பட்ட போது, தாம் மீண்டும் பத்து தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக ஆவதற்கான நடவடிக்கைகள் குறித்து தமக்கு எதுவும் தெரியவில்லை என கூறியுள்ளார்.

ஒரு வேளை, அத்தகைய சூழ்நிலை ஏற்பட்டால், தாம் மீண்டும் போட்டியிடுவது குறித்து கட்சியின் முடிவிற்கே தாம் விட்டுவிடுவதாகவும் தியான் சுவா கூறியுள்ளார்.

இந்நிலையில், இவ்விவகாரம் குறித்து பிரபாகரனிடம் வினவப்பட்ட போது, மக்களின் முடிவிற்கே அதனை தாம் விட்டு விடுவதாக தெரிவித்துள்ளார். மேலும், இவ்விவகாரத்தை பி.கே.ஆரில் யாரும் இதுவரையில் முன்வைக்கவில்லை. அதனால், அது குறித்து தற்போதைக்கு கருத்துரைக்க முடியாது என்றாரவர்.

One thought on “பத்து தொகுதி: தியான் சுவாவிற்கு வழி விடுகிறாரா பிரபாகரன்?

  1. கு.செல்வா

    கடந்த தேர்தலில் பிரபாகரன் சுயேட்சையாக போட்டியிட்டவர்.தேர்தல் ஆணையம் தியான் சுவாவை போட்யிடுவதிலிருந்து விலக்கியதால் பக்காத்தானை சேர்ந்த தேர்தல் பணிக்குழு தாமாகவே முன்வந்து பிரபாகரனுக்கு பரப்புரை செய்தனர்.அவ்வேளையில் அவர் களுக்குள் எந்தவொரு ஒப்பந்தமும் முன் வைக்கப்படவில்லை.அப்படியிருக்க இப்போது தியான் சுவா போட்டியிட நீதிமன்றம் அனுமதி வழங்கி விட்டதால் பிரபாகரன் தன் நாடாளுமன்ற பதவியிலிலுந்து விலக வேண்டுமென்பது சர்வதிகாரத்தனமானது.தேர.தலுக்கு முன் ஒப்பதம்போட்ட மகாதீரை இரண்டு ஆண்டுகள் கழித்து பதிவி விலகுமாறு கேட்டுக்கொள்ள துணிவற்றவர்கள் பிரபாகரனை பதவி விலக சொல்வதற்கு எந்த துகுதியுமற்றவர்கள்.அப்படி மீறி இது நடந்தால் பத்து தொகுதி இந்தியர்கள் குறிப்பாக தமிழர்கள் யாரும் பக்காத்தானை ஆதரிக்க கூடாது.இனி எக்காலத்திலும் நானும் பக்காத்தானுக்கு வாக்களிக்க மாட்டேன்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன