செவ்வாய்க்கிழமை, ஜனவரி 21, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > கலை உலகம் > அல்ட்ரா பாக்ஸ்; ஆஸ்ட்ரோவில் புதிய அனுபவம்
கலை உலகம்

அல்ட்ரா பாக்ஸ்; ஆஸ்ட்ரோவில் புதிய அனுபவம்

கோலாலம்பூர், நவம்பர் 14

அனைத்து மலேசியர்களும் ஆஸ்ட்ரோவின் புதிய அல்ட்ரா பாக்ஸ் வாயிலாக தற்போது சிறந்த பொழுதுபோக்கு அனுபவத்தைப் பெறலாம். இந்த அல்ட்ரா அனுபவம் 4K UHD, கிளவுட் ரெக்கார்டிங் (cloud recording),  பல சாதனைகளின் திரைகள் வாயிலாக ஒருங்கிணைந்த புதிய இடைமுகம், மேம்படுத்தப்பட்ட உள்ளடக்க பரிந்துரைகள் மற்றும் ஒரே நேரத்தில் பல நிகழ்ச்சிகளைப் பதிவு செய்யும் திறன் என அடங்கும். இவை அனைத்தும் புதிய அல்ட்ரா பெட்டி மற்றும் ஆஸ்ட்ரோ கோ-வில் கிடைக்கும். அதை வேளையில், விளையாட்டு ரசிகர்கள் இந்த அல்ட்ரா பாக்ஸ் கொண்டு மலேசியாவில் முதல் 4K UHD அனுபவத்தில் UEFA EURO 2020, the Premier League, Formula 1 மற்றும் La Liga ஆகியவற்றைக் கண்டு மகிழலாம்.

ஆஸ்ட்ரோவின் தலைமை நிர்வாக அதிகாரி, ஹென்ட்ரி டான் கூறுகையில், “வாடிக்கையாளர் சேவை, உள்ளடக்கம், OTT போன்றவற்றில் எங்களுடைய வாடிக்கையாளர்களுக்குச் சிறந்த அனுபவத்தை வழங்க தொடர்ச்சியான பயணத்தில் நாங்கள் செயல்பட்டு வருகிறோம். இன்று ஒரு புதிய மைல்கல் – அல்ட்ரா பாக்ஸ் பொழுதுபோக்கை ஒரு புதிய நிலைக்குக் கொண்டு செல்கிறது. அவ்வகையில், 4K UHD, கிளவுட் ரெக்கார்டிங் (cloud recording), Play from Start மற்றும் புதிய இடைமுகம் கொண்டு பெரிய திரையில் பொழுதுபோக்கை மேம்படுத்துகின்றது. ஆகவே, வாடிக்கையாளர்கள் அல்ட்ரா பாக்ஸ் மேம்படுத்தி புதிய அனுபவத்தைப் பெறலாம். இந்த அல்ட்ரா அனுபவத்தை ஆஸ்ட்ரோ கோ செயலியில் அனைத்து வாடிக்கையாளர்கள் இலவசமாக அனுபவிக்கலாம். இதனை அனுபவிக்க வாடிக்கையாளர்கள் இச்செயலியைப் பதிவிறக்கம் செய்து தங்களுடைய விருப்ப நிகழ்ச்சிகளைக் கண்டு மகிழலாம்”.

மேலும் ஹென்ட்ரி கூறுகையில், “அரை மில்லியனுக்கும் அதிகமான வீடுகளில்  4K தொலைக்காட்சி உள்ளது. அதில் 70% ஆஸ்ட்ரோ வாடிக்கையாளர்கள் அடங்குவர். இந்த அல்ட்ரா பாக்ஸின் வெளியீடு தற்போது வளர்ச்சி கண்டு வரும் 4K UHD  தேவையைப் பூர்த்தி செய்ய சரியான தருணமாகும். அதுமட்டுமின்றி, உபசரிப்பு, சில்லறை வர்த்தகம், உணவு-பானங்கள் துறைகள் 4K UHD-இல் நேரடி விளையாட்டு மற்றும் பிற உள்ளடக்கங்களை ஒளிபரப்ப வாய்ப்புகள் வரவேற்கப்படுகின்றது”.

அல்ட்ரா பாக்ஸ் செயற்கைக்கோள் மற்றும் இணைய தொழில்நுட்பங்களின் கலப்பின முறையைப் பயன்படுத்துகிறது. செயற்கைக்கோள் சிறந்த 4K UHD தரத்தை வழங்குகின்றது. அதுமட்டுமின்றி, அல்ட்ரா பாக்ஸ் இணையத்துடன் இணைத்து நிகழ்ச்சிகளை ஆன் டிமாண்ட் வாயிலாக இந்த நேரத்தில் வேண்டுமென்றாலும் கண்டு மகிழலாம். அதோடு, ஆஸ்ட்ரோ பலதரப்பட்ட பொழுதுபோக்கு மற்றும் பிராட்பேண்ட் சேவையை வழங்குகிறது.

அல்ட்ரா பாக்ஸ் மற்றும் ஆஸ்ட்ரோ கோ வாயிலாக ஒருங்கிணைந்த மற்றும் தடையற்ற புதிய பயனர் இடைமுகத்துடன், வாடிக்கையாளர்கள் பின்வரும் மேம்படுத்தப்பட்ட பார்க்கும் அனுபவத்தை அனுபவிக்கலாம்.

Astro Cloud Recording : புதிய அல்ட்ரா பாக்ஸ் மற்றும் ஆஸ்ட்ரோ கோ-வில் கிடைக்கும். இதன் வழி, வாடிக்கையாளர்கள் அல்ட்ரா பாக்ஸ் அல்லது ஆஸ்ட்ரோ கோ-வில் ஒரே நேரத்தில் பல நிகழ்ச்சிகளைப் பதிவு செய்து, அதனை கிளவுட் சேமிப்புக் கிடங்குயில் வைத்து எப்பொழுது, எங்குகிருந்தாலும், எந்தத் திரையில் வேண்டுமென்றாலும் கண்டு களிக்கலாம். வாடிக்கையாளர்கள் 200 மணிநேர எச்டி பதிவு இலவசமாகவும் மாதம் வெ 15 செலுத்து 1500 மணிநேர வரை பதிவு செய்யலாம்.

Play from Start: நடுவில் இடைநிறுத்தம் செய்த ஒரு நிகழ்ச்சியை தொடக்கத்திலிருந்து காண ‘restart‘ பட்டணை கிளிக் செய்யலாம்.

New Home Screen:  எளிதில் உள்ளடக்கங்களைக் கண்டுபிடிக்க உதவுகின்றது. ‘Store’-யில் உள்ள நிகழ்ச்சிகளைத் தவிர மற்ற அனைத்து நிகழ்ச்சிகளையும் இந்தவொரு கட்டணமின்றி கண்டு களிக்கலாம்.

Discover and Stream VOD: அல்ட்ரா பாக்ஸ் இணையத்துடன் இணைத்து 50,000 க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளை ஆன் டிமாண்ட் அல்லது ஆஸ்ட்ரோ கோ-வில் கண்டு மகிழலாம்.

Search: தொலைக்காட்சி தொடர்கள், திரைப்படங்கள், குழந்தைகள் நிகழ்ச்சிகள், நேரடி உள்ளடக்கம் மற்றும் உங்கள் பதிவுகளின் உள்ளடக்கங்களைக் கண்டுபிடிப்பதை மிகவும் எளிதாக்குகிறது.

Multi-screen and Stop Here, Continue There: நீங்கள் ஒரு திரையில் இடைநிறுத்தம் செய்த நிகழ்ச்சியை மற்றொரு திரையில் கண்டு களிக்கலாம்.

வெ.100-க்கு மேல் கட்டண சந்தா செலுத்தும் வாடிக்கையாளர்கள் இலவசமாக மேம்படுத்தலாம். மாதாந்திர வெ.100-க்கு மேல் கட்டண சந்தா செலுத்தும் வாடிக்கையாளர்கள் இலவசமாக மேம்படுத்தி கொள்ளலாம். வாடிக்கையாளர்கள் அல்ட்ரா பாக்ஸ் இணையத்துடன் இணைத்து 50,000 க்கும் மேற்பட்ட ஆன் டிமாண்ட் நிகழ்ச்சிகள், கிளவுட் ரெக்கார்டிங், மற்றும் பல நன்மைகள் பெறலாம். 4K UHD பார்வையை அனுபவிக்கவாடிக்கையாளர்களுக்கு இணக்கமான 4K தொலைக்காட்சியைக் கொண்டிருக்க வேண்டும். அதுமட்டுமின்றி, தொகுக்கப்பட்ட சலுகைகள் மூலம் வாடிக்கையாளர்கள் ஆஸ்ட்ரோ பிராட்பேண்டுடன் இணைக்கப்படலாம்.

மேல் விவரங்களுக்கு 03 7490 8000 எண்களுக்கு அழைக்கலாம் அல்லது  www.astro.com.my/ultra அகப்பக்கத்தை வலம் வருங்கள். #AstroUltra என்ற ஹேஷ்டேக் உடன் சமூக ஊடகங்களில் அல்ட்ரா பாக்ஸ் குறித்த உரையாடல்களில் கலந்து கொள்ளுங்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன