திங்கட்கிழமை, ஜனவரி 20, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > அரசியல் > வீடு வீடாக பரப்புரை; போலீசின் பெர்மிட் தேவையில்லை!
அரசியல்சமூகம்முதன்மைச் செய்திகள்

வீடு வீடாக பரப்புரை; போலீசின் பெர்மிட் தேவையில்லை!

கோலாலம்பூர், நவ.14-

வீடு வீடாக செல்வது உள்பட அனைத்து விதமான நகரும் தேர்தல் பரப்புரைகளுக்கு போலீசின் அனுமதி தேவையில்லை என சட்டத்துறை தலைவர் (ஏ.ஜி) தோமி தோமஸ் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற ஜனநாயக முறையின் கீழ் தேர்தலுக்காக வீடு வீடாக செல்வது உள்பட அனைத்துவிதமான நகரும் தேர்தல் பரப்புரைகளை மேற்கொள்வது முக்கியமான ஒன்று.

அவ்வகையிலான பரப்புரைகளை மேற்கொள்வதற்கு, தேர்தல் குற்றச் சட்டத்தின் செக்ஷன் 24பி(3) பிரிவின் கீழ், தங்களது அனுமதியைப் பெற வேண்டுமென போலீஸ் அறிவித்துள்ளது. அவ்வகையில், சம்பந்தப்பட்ட சட்டத்தில், வீடு வீடாக பரப்புரை செய்தல் உள்பட நடமாடும் தேர்தல் பரப்புரைகளை மேற்கொள்வது தொடர்பில் தெளிவான விளக்கம் இல்லை என இன்று வெளியிட்ட அறிக்கையின் வாயிலாக தோமி தோமஸ் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், 1955ஆம் ஆண்டு முதல் பார்க்கையில், அனைத்து பொதுத்தேர்தல்கள், இடைத்தேர்தல்களில் வாக்காளர்களைக் கவருவதற்காக அனைத்து கட்சிகளையும் சேர்ந்த வேட்பாளர்கள் போலீசின் அனுமதியைப் பெறாமலேயே அத்தகைய பரப்புரைகளை மேற்கொண்டுவருவது பிரபலமான ஒன்றாகவே இருந்து வந்துள்ளதை தோமி தோமஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதோடு, வாக்களிப்பது என்பது அடிப்படை உரிமை என கூட்டரசு அரசியலைப்பில் கூறப்பட்டுள்ளதை அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன