மீண்டும் அனைத்துலக அளவில் தாமான் மெலாவாத்தி தமிழ்ப்பள்ளி மாணவர்கள் சாதனை

0
2

கோலாலம்பூர், நவம்பர் 14-

அண்மையில் தைவானில் நடைபெற்ற 10ஆவது அனைத்துலக புத்தாக்க கண்டுபிடிப்பு போட்டியில் தாமான் மெலாவாத்தி தமிழ்ப்பள்ளி மாணவர்கள் தங்கப்பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனர்.

 

கடந்த ஜூலை, செப்டம்பர், அக்டோபர் ஆகிய மாதங்களில் நடைபெற்ற போட்டிகளிலும் பங்கேற்று தங்கப்பதக்கங்களை வென்ற இவர்கள், மீண்டும் நான்காவது முறையாக தங்கப்பதக்கங்களை வென்று பள்ளிக்கு சமுதாயத்திற்கும் பெருமைத் தேடி தந்துள்ளனர்.

 

தைவான், ஜப்பான், சீனா, கொரியா, இந்தோனேசியா, மலேசியா, தாய்லாந்து, கொரேசியா, ரஷ்யா, யூக்ரேன், கசாக்‌ஷ்தான், கனடா என 13 நாடுகளைச் சேர்ந்த 418 இளம் அறிவியலாளர்கள் கலந்து கொண்டனர்.

 

யுவிகா மஹாகணபதி, கைலேஷ் சரவணா, கவிஷா நாகராஜன் ஆகியோர் கணினி, சுற்றுச்சூழல், விவசாயத்தை கருப்பொருளாக கொண்டு கண்டுபிடிப்பை உருவாக்கி தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றனர்.

 

இது குறித்து யுவிகாவின் தந்தை மஷாகணபதி கூறுகையில், தாமான் மெலாவாத்தி தமிழ்ப்பள்ளி தோற்றுவிப்பட்டு 100 ஆண்டுகள் வரலாற்றில் இது மிகப் பெரிய வெற்றியாகும். இந்த இளம் வயதில் மாணவர்கள் அனைத்துலக அளவில் சாதனை படைத்தது பாராட்டுக்குரியதாகும். பிள்ளைகளுக்காக நாங்கள் பல சவால்களை சந்திருந்தாலும் இந்த வெற்றி பெருமையளிக்கிறது. இது மற்ற தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கும் எடுத்துக்காட்டாக அமையும்என்று அவர் தெரிவித்தார்.

 

இதற்கு ஆதரவும் ஒத்துழைப்பும் வழங்கிய டத்தோஸ்ரீ அஸ்மின் அலி, துணையமைச்சர் சிவராசா, டத்தோ காந்தாராவ், டான்ஸ்ரீ ரமேஷ், கே.கே.ஜோன், ஷங்கர் ஐயங்கார், டத்தோ சிவராஜ் உட்பட பலருக்கு தன் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டார்.