சென்னை, நவ. 15-

உலகத் தமிழர்களை ஒன்றிணைக்கும் மூன்றாம் உலகத் தமிழ் தொழிலதிபர்கள் திறனாளர்கள் மாநாடு இரண்டாவது நாளாக பல முக்கிய அம்சங்களை தாங்கி நடந்தது.

வெளிநாட்டு முதலீட்டாளர்கள் உடன் மலேசிய தொழிலதிபர்கள் வர்த்தக பரிமாற்றம் குறித்து பல்வேறு விவகாரங்களை பகிர்ந்து கொண்டனர். மூன்று நாட்கள் சென்னை மகளிர் கிறிஸ்துவ கல்லூரியில் நடைபெறும் இந்த மாநாட்டில் 35 நாடுகளில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட பேராளர்கள் கலந்து கொண்டுள்ளார்கள்.

ரைஸ் இயக்கத்தின் மலேசிய தலைவர் சரவணன் சின்னபபன் தலைமையில் மலேசியாவிலிருந்து 63 தொழில் முனைவர்கள் இந்த மாநாட்டில் கலந்துகொண்டு வர்த்தக பரிமாற்றத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இதில் கலந்து கொண்ட மலேசிய இந்திய காங்கிரசின் மத்திய செயலவை உறுப்பினரும் தொழில் முனைவருமான டத்தோ வி.எஸ். மோகன் இந்த மாநாடு மிகப்பெரிய வெற்றி பெற்று இருப்பதாக தெரிவித்தார்.

அதோடு மலேசிய வர்த்தகர்கள் தங்கள் வர்த்தகத்தை உலக அளவில் விரிவுபடுத்த வேண்டும் அதற்கு ஐடி எனப்படும் தகவல் தொழில்நுட்பத்தின் பயன்பாடு அவசியம் என க்ளோஸ்-அப் நிறுவன இயக்குனர் ஜீவன் முத்துப்பிள்ளை தெரிவித்தார்.

தமிழர்களின் பொருளாதார மேம்பாட்டிற்காக மூன்று நாட்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த மாபெரும் மாநாடு சனிக்கிழமை மாலை நிறைவடைகின்றது.