உலகளாவிய தமிழ் தொழிலதிபர்கள் திறனாளர்கள் மாநாடு சென்னை கிறிஸ்டியன் மகளிர் கல்லூரியில் கோலாகலமாக நடந்து வருகின்றது. இதனிடையே வெள்ளிக்கிழமை இரவு உலக அரங்கில் தமிழுக்கு அங்கீகாரம் வழங்கிய உன்னத மனிதர்களுக்கு உலகத்தமிழ் விருதுகள் வழங்கப்பட்டன.

சைபர் ஜெயா பல்கலைக்கழகத்தின் தோற்றுநர் டான்ஸ்ரீ டத்தோ பாலனுக்கு தமிழ் உலக கல்வி தந்தை எனும் உயரிய விருது வழங்கப்பட்டது.

மலேசியாவின் முன்னணி தொழிலதிபரும் சமூக சேவையாளர் மான டத்தோஸ்ரீ ஆண்டிக்கு தமிழ் உலக முன்னோடி வர்த்தகர் எனும் விருது வழங்கப்பட்டது. கல்வியில் பின் தங்கிய மாணவர்களுக்கும் எதிர்காலம் உண்டு என்பதை கருத்தில் கொண்டு அவர்களின் வாழ்வாதாரத்திற்கு வித்திட்ட மை ஸ்கில் அறவாரியத்திற்கு நம்பிக்கைச் சுடர் ஒளி எனும் விருது வழங்கப்பட்டது அதனை அவ்வமைப்பின் தலைவரும் தோற்று வருமான வழக்கறிஞர் பசுபதி பெற்றுக்கொண்டார்.

தமிழ் உலக பெண் சுடரொளி எனும் விருது தொழிலதிபர் பவானி விஸ்வநாதனுக்கு வழங்கப்பட்டது. அதோடு மலேசியாவில் அனைவருக்கும் நன்கு அறிமுகமான பாண்டித்துரைக்கு தமிழ் உலக படைப்பாற்றல் மேதை எனும் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.

விருதுகளை பெற்றுக் கொண்டவர்கள் இந்த மாநாட்டை ஏற்பாடு செய்த ரைஸ் குடும்பத்தினருக்கு நன்றி தெரிவித்துக் கொண்டதோடு தங்களின் அனுபவங்களையும் மன ஓட்டத்தையும் அநேகனிடம் பதிவு செய்துகொண்டனர்.

ஜேம்ஸ் வசந்தனின் தமிழிசை நிகழ்ச்சியும் இந்த விழாவில் மிகச் சிறப்பாக நடந்தது சென்னை மகளிர் கிறிஸ்டியன் கல்லூரி மாணவிகள் தங்களின் படைப்புகளை வழங்கி பார்வையாளர்களை கவர்ந்தனர்.