18,900 வாக்குகளில் வீ ஜெக் செங் முன்னிலை; தேசிய முன்னணியின் வெற்றி உறுதி

0
1

பொந்தியான், நவம்பர் 16-

இன்று நடைபெற்ற தஞ்சோங் பியாய் நாடாளுமன்ற இடைத்தேர்தலின் அதிகாரப்பூர்வமற்ற வாக்கு நிலவரங்களின் படி தேசிய முன்னணி வேட்பாளர் வீ ஜெக் செங் 18,900 வாக்குகளை பெற்று முன்னிலையில் இருக்கிறார்.

இரவு 7.30 வரை வீ ஜெக் செங் 18,900 வாக்குகளையும், நம்பிக்கை கூட்டணி வேட்பாளர் கார்மினி சர்டினி 7,170 வாக்குகளையும், கெராக்கான் வேட்பாளர் வேண்டி சுப்ரமணியம் 1,141 வாக்குகளையும், பெர்ஜாசா கட்சி வேட்பாளர் பட்ரூல்ஹிஷாம் அப்துல் அசிஸ் 654 வாக்குகளையும், சுயேட்சை வேட்பாளர்கள் டாக்டர் அங் சுவான் லோக் 240 வாக்குகளையும், பரிடா அர்யானி 24 வாக்குகளையும் பெற்றிருக்கின்றனர்.

இதுவரை கிடைத்த வாக்குகளின் படி வீ ஜெக் செங் முன்னிலையில் இருப்பதால் தேசிய முன்னணியின் வெற்றி உறுதியானது.

14ஆவது பொது தேர்தலுக்குப் பின்னர் நாட்டில் நடைபெற்ற 9ஆவது இடைத்தேர்தல் இதுவாகும்.