கூச்சிங், நவ.17-

தஞ்சோங் பியாய் இடைத்தேர்தலில், தேசிய முன்னணி மிகப் பெரிய வெற்றியைப் பெற்றிருந்தாலும், அக்கூட்டணியில் மீண்டும் இணைவதை பரிசீலிக்கும் எண்ணம் இல்லை என சரவாக் கட்சிகள் கூட்டணி (ஜி.பி.எஸ்) தெரிவித்துள்ளது.

டத்தோ அப்துல் கரிம் ரஹ்மான் ஹம்சா

நாட்டின் 14ஆவது பொதுத்தேர்தலுக்கு பிறகு, தேசிய முன்னணியிலிருந்து வெளியேறிய பிபிபி உள்பட இதர மூன்று சரவாக் கட்சிகள், ஜி.பி.எஸ் எனும் கூட்டணியை உருவாக்கியதைத் தமது பார்வையில் ஒரு புத்திசாலித்தனமாக கருதுவதாக பிபிபியின் உதவித்தலைவரான தெரிவித்துள்ளார்.

தேசிய முன்னணியில் இருந்த போது, எங்களால் சுதந்திரமாக குரல் கொடுக்க முடியவில்லை. ஆனால், இப்பொழுது அவ்வாறு செய்ய முடிகின்றது. மற்ற கட்சிகள் எங்களது குரலைச் செவிமடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாகவும் டத்தோ அப்துல் கரிம் கூறியுள்ளார்.