புதன்கிழமை, மே 27, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > இந்தியா/ ஈழம் > அரசியலிலும் விஸ்வரூபம் எடுப்பார் கமல்! -எஸ்.ஏ.சி
இந்தியா/ ஈழம்கலை உலகம்

அரசியலிலும் விஸ்வரூபம் எடுப்பார் கமல்! -எஸ்.ஏ.சி

ரஜினிகாந்த், கமல்ஹாசன் இணைந்து அரசியலுக்கு வரவேண்டும் என்று இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

நடிகர் கமல்ஹாசனின் 60 ஆண்டுகால திரைப்பயணத்தை கொண்டாடும் விதமாக தமிழ் திரைத்துறை சார்பில் ’உங்கள் நான்’ என்ற பிரம்மாண்ட நிகழ்ச்சி நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் நடிகர் ரஜினிகாந்த், இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான், எஸ்.ஏ.சந்திரசேகர், இயக்குநர் ரஞ்சித் உள்ளிட்ட திரைக்கலைஞர்கள் பலர் கலந்துகொண்டனர். இந்த விழாவில் கலந்துகொண்டு பேசிய எஸ்.ஏ.சந்திரசேகர், ‘நடிகர்கள் ஏன் அரசியலுக்கு வரக்கூடாது. அண்ணா, கருணாநிதி, என்.டி.ஆர் சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்தவர்கள். கமல் துணிச்சலாக அரசியலுக்கு வந்துவிட்டார். நிச்சயம் அவர் விஸ்வரூபம் எடுப்பார்.

ரஜினியை அரசியலுக்கு வரவேண்டும் என்று நான் முன்பே அவரிடம் கூறியிருந்தேன். ஆனால், அவருக்கு முன்பே கமல்ஹாசன் வந்துவிட்டார். ரஜினிகாந்தும் அரசியலுக்கு வரவேண்டும் என்று ஆசைப்படுகிறேன். ஏமாற்றிவிடாதீர்கள். ரஜினி, கமல் இணைந்து அரசியலுக்கு வரவேண்டும். இருவரும் சேர்ந்தால் தமிழ்நாட்டுக்கும், தமிழர்களுக்கும் நல்லது. தமிழ்நாட்டின் தண்ணீரைக் குடித்தாலே தமிழன்தான்.

ஆள்பவர்கள் புதிதாக வருபவர்களுக்கு வழிவிட வேண்டும். அராஜகம் இல்லாத ஊழல் இல்லாத அரசைத் தர வழி விடுங்கள். உங்கள் பின்னால் என்னைப் போன்ற இளைஞர்கள் நிற்போம். குத்துவதற்கு வருகிறவன், நெஞ்சில் குத்தமாட்டான். பின்னாடிதான் குத்துவான். உங்கள் தம்பிமார்கள் வரும்போது நீங்கள் அவர்களுக்கு வழிவிட வேண்டும்’ என்று தெரிவித்தார். அவருடைய பேச்சு அரசியல்களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன