பாதுகாப்புக்காக பொது மக்களின் கைத்தொலைபேசிகள் இனி பரிசோதனை..!

0
6

தகவல் தொடர்புகளின் வழி ஆபாசம், தாக்குதல்கள், மிரட்டல்கள் போன்ற அச்சுறுதல்களில் இருந்து, நாடு மற்றும் தனிநபரின் பாதுகாப்பை உறுதிப்படுத்த, பொதுமக்களின் கைத்தொலைப்பேசிகளை,பரிசோதனைச் செய்யும் உரிமையை அரச மலேசிய போலீஸ் படை கொண்டிருக்கின்றது.

1998-ஆம் ஆண்டு தொடர்பு மற்றும் பல்லூடகச் சட்டம், செக்‌ஷன் 233-ரின் கீழ், பொது அமைதியைப் பாதுகாக்க, அந்நடவடிக்கை அனுமதிக்கப்படுவதாக டத்தோ முகம்ட் அஜிஸ் ஜம்மான்  கூறியிருக்கின்றார்.

குறிப்பான நோக்கம் எதுவுமின்றி, தங்களின் கைத்தொலைபேசிகளை போலீசார் சோதனை செய்யும்போது, பொதுமக்கள் தங்களின் உரிமைக் குறித்த விவரங்களை தெரிந்திருக்க வேண்டும்.

குறிப்பாக, செயல்பாட்டு தர விதிமுறையான எஸ்.ஒ.பியை அவர்கள் பின்பற்றுகின்றனரா என்பதை உறுதிச் செய்வதற்கு, சோதனைச் செய்யும் போலீசாரின் அடையாளத்தைக் கேட்டறிவது, அவசியம் என்று அவர் குறிப்பிட்டார்

சம்பந்தப்பட்ட போலீசார், எஸ்.ஓ.பியை மீறியது உணரப்பட்டால், உடனடியாக புக்கிட் அமான்  அல்லது அருகிலுள்ள எந்த போலீஸ் நிலையத்திலும் புகார் அளிக்கலாம் என்று இன்று நாடாளுமன்றத்தின் மக்களவை கேள்வி நேரத்தின்போது எழுப்பப்பட்ட கேள்விக்கு அஜிஸ் இவ்வாறு பதிலளித்தார்.