திங்கட்கிழமை, டிசம்பர் 16, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > சமூகம் > டத்தோ சம்பந்தனின் நினைவாக தீபாவளி உணவு பொருட்கள் வழங்கப்பட்டன
சமூகம்முதன்மைச் செய்திகள்

டத்தோ சம்பந்தனின் நினைவாக தீபாவளி உணவு பொருட்கள் வழங்கப்பட்டன

செர்டாங், நவ.18-

மறைந்த முன்னாள் ஐ.பி,எஃப் தேசிய தலைவர் செனட்டர் டத்தோ எம்.சம்பந்தனின் நினைவாக அவரின் குடும்பத்தார் வறிய நிலையில் வாழும் குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு உணவு பொருட்கள் மற்றும் அன்பளிப்புகளை வழங்கினர்.

தீபாவளி பண்டிகை காலங்களில் ஏழை எளியோருக்கு உணவு பொருட்கள் மற்றும் அன்பளிப்புகள் வழங்குவதை வழக்கமாகக் கொண்டிருந்த முன்னாள் ஐ.பி,எஃப் தேசிய தலைவர் டத்தோ சம்பந்தனின் சமூக நடவடிக்கைகளைத் தொடரும் வகையில் அவரின் குடும்பத்தினர் இப்பொருட்களை வழங்கி அவர்களை மகிழ்ச்சிப்படுத்தினர்.

ஐபிஎஃப் கட்சியின்  உலு லங்காட் மகளிர், இளைஞர் பிரிவின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் டத்தின் ஜெயலட்சுமி சம்பந்தன் மகளிர் பிரிவு தலைவி ராஜாம்மா ஆகியோர் 50 பேருக்கு உணவு பொருட்கள் மற்றும் அன்பளிப்புகளை வழங்கினர்.

இந்நிகழ்ச்சியில் ஐபிஎஃப் இடைக்கால தேசிய தலைவர் டத்தோ லோகநாதன், உதவி தலைவர் டத்தோ விஸ்வநாதன், ஆலோசகர் டத்தோஸ்ரீ வனத்தையா,  மத்திய செயலவை உறுப்பினர் டத்தோ சுகு, உலு லங்காட் தொகுதி தலைவர் மோகன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

தீபாவளியையொட்டி ஆண்டுதோறும் இந்நிகழ்ச்சி தொடரப்படும் என்று ஐபிஎஃப்  உலு லங்காட் இளைஞர் பிரிவின் தலைவர் ச.கணேஷ் குமார் குறிப்பிட்டார்.

இந்நிகழ்ச்சிக்கு வருகை புரிந்த அனைவருக்கும் அவர் நன்றி தெரிவித்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன