திங்கட்கிழமை, டிசம்பர் 16, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > அரசியல் > பிரதமராகும் அன்வாரின் எண்ணம் கனவாகிடுமா?
அரசியல்முதன்மைச் செய்திகள்

பிரதமராகும் அன்வாரின் எண்ணம் கனவாகிடுமா?

கோலாலம்பூர், நவ.19-

நாட்டின் 8ஆவது பிரதமராக பி.கே.ஆர் கட்சியின் தலைவரான டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் பொறுப்பேற்பாரா? என்ற கேள்வி தற்போது, எழுந்துள்ளது.

கடந்த 14ஆவது பொதுத்தேர்தலில், பெர்சாத்து கட்சியின் தலைவரான துன் டாக்டர் மகாதீர் முகமட் முதலில் பிரதமராக பொறுப்பேற்பார் எனவும் பிறகு, அப்பொறுப்பை அவர் டத்தோஸ்ரீ அன்வாரிடம் வழங்குவார் எனவும் பக்காத்தான் ஹராப்பான் மக்களிடம் வாக்குறுதி அளித்திருந்தது.

அக்காலக்கட்டத்தில், துன் மகாதீர் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட போது, அதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தவர்களில் பி.கே.ஆரின் தலைவர்களான டத்தோஸ்ரீ அஸ்மின் அலி, ஸூராய்டா கமாருடின் ஆகியோர் அடங்குவர்.

அதன் பிறகு, பக்காத்தானும் அத்தேர்தலில் 121 நாடாளுமன்ற தொகுதிகளை வென்று ஆட்சியைப் பிடித்தது. அதனைத் தொடர்ந்து, சிறை தண்டனையை அனுபவித்து வந்த அன்வாருக்கு அப்போதைய மாமன்னர் ஐந்தாவது சுல்தான் முகமட் முழுமையான மன்னிப்பை வழங்கினார்.

பிறகு, போர்ட்டிக்சன் நாடாளுமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலில் போட்டியிட்டு அத்தொகுதியின் உறுப்பினரான அன்வார் பி.கே.ஆரின் தலைவர் பொறுப்பையும் ஏற்றுக்கொண்டார்.

தொடர்ந்து, பி.கே.ஆர். கட்சித் தேர்தலில், அஸ்மின் அலியும் ரபிசி ரம்லியும் துணைத்தலைவர் பதவிக்கு போட்டியிட்டதில், அஸ்மின் அலி அப்பதவியைத் தக்க வைத்துக்கொண்டார். கட்சித் தேர்தலில் தோல்வி கண்ட ரபிசியை, அன்வார் உதவித் தலைவராக நியமித்தது அஸ்மினுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியதாக கூறப்படுகின்றது.

இந்நிலையில், அண்மையக் காலமாக, பி.கே.ஆரின் கூட்டங்களில் கலந்துக்கொள்ளாத அஸ்மின் அலி, அன்வாரை விட மகாதீருடன் நெருக்கமாக இருந்து வருகிறார். குறிப்பாக, மகாதீர் முழுத்தவணைக்கு பிரதமராக நீடிக்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறார். அவருக்கு ஆதரவாக ஸூராய்டா கமாருடினும் இருந்து வருவதாக கூறப்படுகின்றது.

ஜொகூர் தஞ்சோங் பியாய் இடைத்தேர்தலில், பக்காத்தானின் படுத்தோல்வியின் காரணமாக, மகாதீர் பிரதமர் பதவியை அன்வாரிடம் ஒப்படைக்க வேண்டுமென நெருக்குதல்கள் வழங்கப்படுவதாகக் கூறப்ப்படுகின்றது. அந்த நெருக்குதல்களை முறியடிக்கும் வகையில், டத்தோஸ்ரீ அஸ்மின் அலி செயல்படுவதாக ஆருடங்கள் வெளியாகியுள்ளன.

தற்போது, அஸ்மின் அலி அவரது இல்லத்தில் தேசிய முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்தித்திருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன