துன் மகாதீருக்கு மூக்கில் இரத்தம்; உடல் நலக்குறைவா?

0
1

கோலாலம்பூர், நவம்பர் 19-

இன்று காலை எம்பிஓபி அனைத்துலக செம்பனை எண்ணெய் மாநாட்டையும் கண்காட்சியையும் பிரதமர் துன் மகாதீர் தொடக்கி வைத்தார்.

அதன் பின்னர், செய்தியாளர் கூட்டத்தில் கலந்து கொண்ட அவருக்கு திடீரென்று மூக்கில் இரத்தம் வந்தது. இதனால், அந்த சந்திப்புக் கூட்டம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது.

உடனடியாக, பிரதமர் அங்கிருந்து பாதுகாப்பாக அழைத்துச் செல்லப்பட்டார்.

இந்நிலையில், பிரதமரின் உடல்நலத்தில் எந்தப் பிரச்னையும் இல்லை என்று பிரதமர் துறை அறிக்கையின் மூலம் உறுதிப்படுத்தியுள்ளது. அவர் பணிக்காக அலுவலகத்திற்கு சென்றிருக்கிறார் என்று கூறப்பட்டுள்ளது.