செவ்வாய்க்கிழமை, ஜனவரி 28, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > முதன்மைச் செய்திகள் > கருடாவை வென்றது ஹரிமாவ் மலாயா !
முதன்மைச் செய்திகள்விளையாட்டு

கருடாவை வென்றது ஹரிமாவ் மலாயா !

கோலாலம்பூர், நவ.20 –

2022 உலகக் கிண்ணம் / 2023 ஆசிய கிண்ண கால்பந்துப் போட்டியின் தகுதிச் சுற்று ஆட்டத்தில் மலேசியா 2 – 0 என்ற கோல்களில் தனது பரம வைரியான இந்தோனேசியாவை வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம் மலேசியா  9 புள்ளிகளுடன் பட்டியலில் இரண்டாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

கடந்த மாதம் ஜக்கார்த்தாவில்  3-  2 என்ற கோல்களில் இந்தோனேசியாவை வீழ்த்திய மலேசியா , செவ்வாய்கிழமை இரவு 70 ஆயிரம் ரசிகர்களின் ஆதரவுடன் புக்கிட் ஜாலில் அரங்கில் களமிறங்கியது. முதல் பாதி ஆட்டத்தை முழுமையாக ஆக்கிரமித்த ஹரிமாவ் மலாயா 30 ஆவது நிமிடத்தில் தனது முதல் கோலைப் போட்டது.

சபாவி ரஷிட் போட்ட ப்ரீ கீக் கோலின் மூலம் மலேசியா முன்னணிக்குச் சென்றது. இரண்டாம் பாதி ஆட்டத்தில் மீண்டும் ஆட்டத்தை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர இந்தோனேசியா முயன்றது. எனினும் 72 ஆவது நிமிடத்தில் சபாவி ரஷிட் அடித்த கோல் மலேசியாவின் வெற்றியை உறுதி செய்தது.

இந்த தோல்வியினால் இந்தோனேசியா எந்த ஒரு புள்ளிகளுமின்றி பட்டியலில் இறுதி இடத்தில் உள்ளது. ஆக கடைசியாக 2005 ஆம் ஆண்டில் இந்தோனேசியா, மலேசியாவை அதன் சொந்த அரங்கில் வீழ்த்தியது. இந்நிலையில் 14 ஆண்டுகளுக்குப் பின்னர் மலேசியாவை வீழ்த்தும் இந்தோனேசியாவின் எண்ணம் ஈடேறவில்லை.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன