பிரதமர் பதவியிலிருந்து என்னை நீக்கலாம்! துன் மகாதீர்

0
3

பெட்டாலிங் ஜெயா, நவ.20-

ஜொகூர், தஞ்சோங் பியாய் இடைத்தேர்தலில் தோல்வியைத் தொடர்ந்து, பிரதமர் பொறுப்பை துன் டாக்டர் மகாதீர் முகமட் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமிடம் ஒப்படைக்க வேண்டுமென பல தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், அந்த வலியுறுத்தல்களுக்கு துன் மகாதீர் இன்று பதிலளித்துள்ளார். தம்மை பிரதமர் பதவியிலிருந்து விலக்குவது பக்காத்தான் ஹாராப்பான் தலைவர்கள் மன்றத்தின் முடிவை பொறுத்தது.

அவர்கள் அவ்வாறு விரும்பினால், தன்னை அப்பொறுப்பிலிருந்து நீக்கலாம் என இன்றும் பெட்டாலிங் ஜெயாவிலுள்ள பெர்சாத்து கட்சியின் உச்சமன்ற கூட்டத்திற்கு பிறகு, செய்தியாளர்களைச் சந்தித்த துன் டாக்டர் மகாதீர் அவ்வாறு கூறினார்.

இதனிடையே, அவருக்கு  எதிராக அன்வார் நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானத்தைக் கொண்டு வர முயற்சிக்கிறாரா? என்ற கேள்வி முன்வைக்கப்பட்ட போது, ஜனநாயகத்தைக் கடைப்பிடிக்கின்ற நாட்டில் யார் வேண்டுமானாலும் அத்தகைய தீர்மானத்தைக் கொண்டு வர முடியுமென துன் மகாதீர் பதிலளித்துள்ளார்.