அமைச்சரவையில் மாற்றம்! -துன் மகாதீர்

0
2

பெட்டாலிங் ஜெயா, நவ.20-

ஜொகூர், தஞ்சோங் பியாய் இடைத்தேர்தலில் தோல்வியைத் தொடர்ந்து, அமைச்சரவையில் மறுசீரமைப்பை மேற்கொள்வதை பரிசீலிக்க தயாராக இருப்பதாக, பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் தெரிவித்துள்ளார்.

அமைச்சர்களின் அடைவுநிலையை தாம் மறு ஆய்வு செய்யவிருப்பதாகவும், இன்று பெர்சாத்து கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியுள்ளார்.

அந்த மறுசீரமைப்பு நாளையே நடந்திடாது. நடப்பிலுள்ள அமைச்சர்களின் அடைவுநிலை மற்றும் ஆற்றலை மறு ஆய்வு செய்த பிறகு, அமைச்சரவையை மறுசீரமைப்பது குறித்து விவாதிக்கப்படும் என துன் மகாதீர் குறிப்பிட்டுள்ளார்.

அந்த மறுசீரமைப்பிற்கான காலவரையறை பிரதமர் குறிப்பிடாவிட்டாலும், அடுத்தாண்டு நவம்பரில் மலேசியா ஏற்று நடத்தவிருக்கும் ஆசிய பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு மாநாட்டிற்குள் அதனை மேற்கொள்ளுவதற்கான சாத்தியத்தையும் துன் மகாதீர் மறுக்கவில்லை.