தே.மு. பிரதிநிதிகளுடன் சந்திப்பு; பி.கே.ஆர். கூட்டத்தைப் புறக்கணித்த அஸ்மின் அலி

0
1

கோலாலம்பூர், நவ.20-

தேசிய முன்னணியின் சுமார் 30 நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் சந்திப்பை நடத்தியது குறித்து விவாதிப்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பி.கே.ஆர். கட்சியின் அரசியல் பிரிவு கூட்டத்திற்கு, அக்கட்சியின் துணைத்தலைவர் டத்தோஸ்ரீ அஸ்மின் அலி, உதவித் தலைவர் ஸூராய்டா கமாருடின் ஆகிய இருவரும் வருகைப் புரியவில்லை.

அந்த சந்திப்பு குறித்து விளக்கம் அளிப்பதற்கு, அஸ்மின் அலி புதன்கிழமை நடைபெறும் கூட்டத்திற்கு வருகைப் புரிய வேண்டுமென அக்கட்சியின் தலைவரான டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நேற்று கூறியிருந்தார்.

ஆயினும், அக்கூட்டத்தில் தனது வருகையை உறுதி செய்வதற்கு முன்னர், தாம் வேறு நிகழ்ச்சிகளில் கலந்துக்கொள்ள வேண்டியுள்ளதா? என்பதை பார்க்க வேண்டுமென அஸ்லின் அலி கூறியிருந்தார்.

பி.கே.ஆரின் துணைத்தலைவராக தேர்வு செய்யப்பட்டதிலிருந்து அஸ்மின் அலி, அக்கட்சியின் அரசியல் பிரிவு, உச்சமன்ற கூட்டங்களில் கலந்துக்கொள்ளாமல் இருந்து வருகின்றார்.