கோலாலம்பூர், நவ.20-
பி.கே.ஆரின் கூட்டத்திற்கு வர தவறிய அதன் துணைத்தலைவர் டத்தோஸ்ரீ அஸ்மின் அலி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படாது.
மாறாக, தேசிய முன்னணியின் சுமார் 30 நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் சந்திப்பை நடத்தியது குறித்து விளக்கம் அளிப்பதற்கு, அவருக்கு கால அவகாசம் வழங்கப்பட்டிருப்பதாக அதன் தொடர்பு பிரிவு இயக்குநர் ஃபாமி ஃபாட்சில் தெரிவித்துள்ளார்.
பி.கே.ஆரின் தலைவர்களில் ஒருவராக விளங்கும் அஸ்மின் அலி, அரசியல் பிரிவு கூட்டம் உள்பட கட்சியின் அனைத்து கூட்டங்களுக்கும் வருகைப் புரிவது மிக அவசியம் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
அஸ்மின் அலியிடமிருந்து முழுமையான விளக்கத்தை பெறுவதற்காக காத்துக்கொண்டிருக்கிறோம். அவர் கூட்டத்திற்கு வராததால், நாங்கள் காக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அவருக்கு காரணம் கோரும் கடிதத்தை கட்சி இன்னமும் வெளியிடவில்லை என நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற பி.கே.ஆரின் அரசியல் பிரிவு கூட்டத்தில் கலந்துக்கொண்ட பிறகு, ஃபாமி ஃபாட்சில் செய்தியாளர்களிடம் கூறினார்.