இலங்கை: தம்பி அதிபர்; அண்ணன் பிரதமர்

0
20

கொழும்பு:

இலங்கையின் புதிய பிரதமராக மகிந்த ராஜபக்சேவை அதிபர் கோத்தபாய ராஜபக்சே நியமித்துள்ளார்.

இலங்கை அதிபர் தேர்தலில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சே வெற்றி பெற்றார். இலங்கையின் 7-வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக கோத்தபாய ராஜபக்சே பொறுப்பேற்றுள்ளார்.

இந்நிலையில் மக்களின் தீர்ப்புக்கு மதிப்பளித்து பிரதமர் பதவியில் இருந்து விலகுவதாக ரணில் விக்கிரமசிங்கே அறிவித்துள்ளார். இது தொடர்பாக தொலைக்காட்சியில் உரையாற்றிய ரணில் விக்கிரமசிங்கே, நாடாளுமன்றத்தில் தமக்கு பெரும்பான்மை இருக்கிறது.

ஆனாலும் மக்களின் தீர்ப்புக்கு மதிப்பளித்து பதவி விலகுகிறேன். அதிபர் கோத்தபாய ராஜபக்சேவிடம் நாளை அதிகாரப்பூர்வமாக ராஜினாமாவை தெரிவிக்கிறேன் என்றார். இதனிடையே புதிய பிரதமராக மகிந்த ராஜபக்சேவை, அதிபர் கோத்தபாய ராஜபக்சே நியமித்துள்ளார்.

மேலும் அதிபர் தேர்தலுக்குப் போட்டியிட்ட சஜித் பிரேமதாசவின் ஆதரவாளர்கள் தனி கட்சி ஒன்றை தொடங்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.