Home மலேசியா கல்வி யூபிஎஸ்ஆர் தேர்வு முடிவுகளால் மீண்டும் தலை நிமிர்ந்தன தமிழ்ப்பள்ளிகள்

யூபிஎஸ்ஆர் தேர்வு முடிவுகளால் மீண்டும் தலை நிமிர்ந்தன தமிழ்ப்பள்ளிகள்

1127

கோலாலம்பூர், நவம்பர் 21-

இன்று வெளியிடப்பட்ட யூபிஎஸ்ஆர் தேர்வு முடிவுகளால் நமது தமிழ்ப்பள்ளிகளின் நிலை மீண்டும் உயர்ந்துள்ளது.

தமிழ்ப்பள்ளிகளின் பெருமையை மேலும் உயர்த்திப் பிடிக்கும் வகையில் இவ்வாண்டு நமது மாணவர்கன் சிறந்த தேர்ச்சி பெற்றுள்ளனர்.

நாடு முழுவதிலும் உள்ள தமிழ்ப்பள்ளிகளில் 8A, 7A, 6A பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு தமிழ்ப்பள்ளிகளின் ஒட்டுமொத்த யூபிஎஸ்ஆர் தேர்ச்சி விகிதம்  68.9 %ஆக இருந்தது. இவ்வாண்டு அதன் எண்ணிக்கை 78.51%ஆக அதிகரித்துள்ளது. மலாய், சீனப்பள்ளிகளை ஒப்பிடுகையில் தமிழ்ப்பள்ளிகளின் அடைவு நிலையே சிறப்பாக உள்ளது. இது தமிழ்ப்பள்ளிகளுக்கு மட்டுமல்லாது சமுதாயத்திற்கு பெருமையளிக்கிறது.

மாணவர்களின் வெற்றிக்காக பாடுப்பட்ட பெற்றோர்கள், ஆசிரியர்கள் மட்டுமல்லாது அவர்களது கல்விக்கு பல்வேறு வகையில் உதவிய அரசு மற்றும் அரசு சார அமைப்புகளுக்கும் மகிழ்ச்சியில் உள்ளனர்.