சீ போட்டி : உயரம் தாண்டுதலில் நௌராஜ் தங்கம்!

கோலாலம்பூர், ஆக. 26-

சீ விளையாட்டுப் போட்டியின் உயரம் தாண்டுதலில் மலேசியாவின் நௌராஜ் சிங் தங்கப்பதக்கம் வென்றார். வெள்ளி பதக்கத்தை மலேசியாவின் மற்றொரு வீரரான லீ ஹுப் வேய் வென்றார்.

2013, 2015ஆம் ஆண்டுகளில் நடந்த சீ விளையாட்டுப் போட்டியின் உயரம் தாண்டுதலில் நௌராஜ் சிங், தங்கப்பதக்கம் வென்றிருந்தார். 2017 சீ போட்டியிலும் அவர் தங்கப்பதக்கம் வென்று ஹெட்ரிக் சாதனை படைத்துள்ளார்.

2.24 மீட்டர் உயரம் தாண்டி, மலேசியாவின் லூ கும் ஜீயின் 1995 சீ போட்டியின் சாதனையை நௌராஜ் சமன் செய்துள்ளார்.