ரவுப் தமிழ்ப்பள்ளியில் வாகையர் விழா; நடன திறமையை வெளிப்படுத்திய மாணவர்கள்

0
2

ரவூப், நவம்பர் 21-

தேசிய வகை ரவுப் தமிழ்ப்பள்ளியில் வாகையர் விழா அண்மையில் சிறப்பாக நடந்தேறியது.

நடனங்களை மையமாக வைத்து நடந்த இவ்விழாவில் முதலாம் ஆண்டு முதல் ஆறாம் ஆண்டு மாணவர்கள் வரை கலந்து கொண்டு நடனத்தின் மூலம் தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.

ஒவ்வொரு வகுப்பு மாணவர்களும் தசமகாவித்யா, கையூடகபேசி, பெண்களை போற்றுவோம், அன்பு, இலக்கு என  தனித்தனி கருப்பொருளை கொண்டு சிறப்பாக நடனத்தை வழங்கினர்.

இந்நிகழ்வில் நீர்,நில, இயற்கைவள துணை அமைச்சர் தெங்கு சுல்பூரி ஷா பின் ராஜா பூஜி, பகாங் மாநில் கல்வி இலாகா தமிழ்மொழி உதவி இயக்குநர் திரு.சரவணன் இராமசந்திரன் ஆகியோர் சிறப்பு வருகை புரிந்தனர்.

இந்நிகழ்வில் பெற்றோர்கள், பார்வையாளர்கள் உட்பட 500 பேர் கலந்து கொண்டனர். கல்வியை தவிர்த்து இது போன்று புறப்பாட நடவடிக்கைகளிலும் மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது.