யூபிஎஸ்ஆர் தேர்வில் யோதேஸ்வரன் 7ஏ

0
1

கோலாலம்பூர், நவம்பர் 21-

யூபிஎஸ்ஆர் தேர்வில் செராஸ் தமிழ்ப்பள்ளி மாணவர் யோதேஸ்வரன் கிருஷ்ணன் 7ஏ 1பி பெற்றுள்ளார்.

பள்ளியில் சிறந்த மாணவராக விளங்கிய யோதேஸ்வரன் யூபிஎஸ்ஆர் தேர்வுக்காக அதிக பயிற்சிகளை செய்ததாகவும் பள்ளியில் நடக்கும் பிரத்தியேக வகுப்புகளுக்கு தவறாவல் சென்று பாடத்தில் அதிக கவனம் செலுத்தியதாலும் சிறந்த தேர்ச்சி பெற முடிந்ததாக அவரது தந்தை கிருஷ்ணன் தெரிவித்தார்.

தனது வெற்றிக்கு ஊக்குவித்த பெற்றோர் கிருஷ்ணன்-பிரேமா மற்றும் ஆசிரியர்களுக்கு நன்றிகளை தெரிவித்துக் கொண்டார் மாணவர் யோதேஸ்வரன்.