சனிக்கிழமை, டிசம்பர் 7, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > அரசியல் > பி.கே.ஆர் இளைஞர் பிரிவின் தைரியத்தை பாராட்டிய அஸ்மின் அலி!
அரசியல்முதன்மைச் செய்திகள்

பி.கே.ஆர் இளைஞர் பிரிவின் தைரியத்தை பாராட்டிய அஸ்மின் அலி!

புத்ராஜெயா, நவ.21-

பி.கே.ஆரின் இளைஞர் பிரிவு மாநாட்டை தாம் தொடக்கி வைப்பதற்கு, அதன் தலைமைத்துவம் அனுமதியளிக்காத நிலையில், அதனை துணிந்து எதிர்க்கும் அப்பிரிவின் ஆதரவாளர்களைப் பாராட்டுவதாக அக்கட்சியின் துணை தலைவரான டத்தோஸ்ரீ அஸ்மின் அலி தெரிவித்துள்ளார்.

அந்த மாநாடு டிசம்பர் 6ஆம் தேதி நடைபெறவிருக்கும் நிலையில், கட்சியின் நலனுக்காக, அத்தரப்பினர் துணிந்து குரலெழுப்பியிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

தாமே அந்த மாநாட்டை தொடக்கிவைக்க வேண்டுமென இளைஞர் பிரிவிலுள்ள பெரும்பான்மையானோர் தெரிவித்துள்ளனர். அவர்களின் அந்த நிலைப்பாட்டிற்கு அனைத்து தரப்பினரும் மதிப்பளிக்க வேண்டும். காரணம், இவ்வளவு நாள் கட்சியில் நாம் கடைபிடித்து வந்த ஜனநாயகம் அதுவாகும் என டத்தோஸ்ரீ அஸ்மின் அலி குறிப்பிட்டுள்ளார்.

இளைஞர் பிரிவின் மாநாட்டை தொடக்கி வைப்பதற்கு, டத்தோஸ்ரீ அஸ்மின் அலிக்கு விடுக்கப்பட்ட அழைப்பை, இளைஞர் பிரிவின் தலைமைத்துவ மன்றம், கடந்த அக்டோபர் 20ஆம் தேதி ரத்து செய்தது.

இந்நிலையில், கட்சியின் பாரம்பரியத்தின்படி, துணைத்தலைவரே இளைஞர் பிரிவின் மாநாட்டை தொடக்கி வைக்க வேண்டுமென நேற்று அப்பிரிவின் துணைத்தலைவரான ஹில்மான் இதாம் வலியுறுத்தியிருந்தார். அம்முடிவிற்கு நாடு முழுமையிலும் உள்ள 196 இளைஞர் பிரிவு தலைவர்களில், 132 பேர் ஆதரவளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இதனிடையே, கட்சியின் துணைத்தலைவர் என்ற அடிப்படையில், இளைஞர் பிரிவின் அம்முடிவை தாம் பரிசீலணை செய்யவிருப்பதாக டத்தோஸ்ரீ அஸ்மின் அலி கூறியுள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன