பிரதமர் பதவியை ஒப்படைப்பதில் மாற்றம் இல்லை! -டத்தோஸ்ரீ அன்வார்

0
1

பெட்டாலிங் ஜெயா, நவ.22-

பிரதமர் பதவியை ஒப்படைப்பது தொடர்பில் செய்துக்கொள்ளப்பட்ட உடன்பாட்டில், இதர முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதை தாமும் துன் டாக்டர் மகாதீர் முகமட்டும் ஏற்றுகொள்ளவில்லை என பி.கே.ஆர் கட்சியின் தலைவரான டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

மேலும், எந்தவொரு தந்திர நடவடிக்கைகளிலும் தங்கள் இருவரது பெயர்களைப் பயன்படுத்தக்கூடாது எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

14ஆவது பொதுத்தேர்தலுக்கு முன்பு, பிரதமர் பதவியை ஒப்படைப்பதில் செய்துக்கொள்ளப்பட்ட உடன்பாட்டில் எவ்வித மாற்றமும் இல்லை என வியாழக்கிழமை புத்ராஜெயாவில் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட்டைச் சந்தித்த பிறகு டத்தோஸ்ரீ அன்வார் கூறியுள்ளார்.

 அச்சந்திப்பில், அந்த அதிகார மாற்றம் ஏற்புடைய காலக்கட்டத்தில் அமைதியாகவும் முறையாகவும் நடைபெற வேண்டுமெனவும், தாம் துன் டாக்டர் மகாதீரிடம் கூறியதாகவும் டத்தோஸ்ரீ அன்வார் குறிப்பிட்டுள்ளார்.