புதிய அமைச்சரவை; அன்வார் துணைப்பிரதமரா?

0
2

புத்ராஜெயா, நவ.22-

ஜொகூர் தஞ்சோங் பியாய் நாடாளுமன்ற இடைத்தேர்தலில் பக்காத்தான் ஹாராப்பானின் படுதோல்வியைத் தொடர்ந்து, அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட வேண்டியது குறித்து பரிசீலிக்க விருப்பதாக பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் அண்மையில் கூறியிருந்தார்.

இந்நிலையில், மாற்றம் செய்யப்பட்ட புதிய அமைச்சரவை எனக்கூறப்படும் பெயர் பட்டியல் ஒன்று சமூகவலைத்தளங்களில், பரவலாக பகிரப்பட்டு வருகின்றது. அதில், துன் டாக்டர் மகாதீர் முகமட் பிரதமர் பொறுப்பிற்கு நிலைநிறுத்தப்பட்டுள்ள நிலையில், பி.கே.ஆரின் தலைவரான டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் துணைப்பிரதமர் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், அந்த புதிய அமைச்சரவை அடுத்தாண்டு முதல் அமலுக்கு வரும் என்பதை குறிக்கும் வகையில், அதில் 2020ஆம் ஆண்டு குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆயினும், அந்த அமைச்சரவை பட்டியல் பொய்யானது என பிரதமர்துறை உறுதிபடுத்தியிருப்பதாக, ஆஸ்ட்ரோ அவானி தனது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளது.