60 நிமிடங்களில் 60 பாடல்கள்! ராஜேஷ் வைத்தியா மேஜிக்! அதிரடி படைக்கப்போகும் மோஜோ!

கோலாலம்பூர், நவ. 22-

மலேசிய இசை ரசிகர்கள் மட்டுமின்றி அனைவரையும் கவர்ந்த மோஜோவின் மாபெரும் இசை நிகழ்ச்சி சனிக்கிழமை கோலாகலமாக நடைபெறவுள்ளது.

தமிழகத்தின் முன்னணி இசை கலைஞர்களான ஹரிச்சரண், சுவேதா மோகன், சக்திஶ்ரீ கோபால், நிக்கில் மேத்தியூ, நேஹா ஆகியோருடன் ராஜேஷ் வைத்தியாவுன் கலந்து கொள்கிறார். இன்டோ சோல் இசை குழுவும் இதில் பங்கேற்கிறார்கள். இது அட்டகாசமான இசை திருவிழாவாக அமையவிருக்கின்றது.

இந்நிலையில் வியாழக்கிழமை இந்த நிகழ்ச்சி குறித்த செய்தியாளர் சந்திப்பு இஸ்தானா தங்கும் விடுதியில் நடந்தது. இதில் பாடகி சக்திஶ்ரீ கோபாலன், நிக்கில் மேத்தியூ, பாடகி நேஹா, நிக்கில் மேத்தியூ ஆகியோருடன் ராஜேஷ் வைத்தியாவும் கலந்து கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் மிக முக்கிய அம்சமாக நாடறிந்த வீணை கலைஞர் ராஜேஷ் வைத்தியா, 60 நிமிடங்களில் 60 பாடகளை வாசிக்க விருக்கின்றார். அனைத்து ரகப் பாடல்களையும் அவர் வாசிக்கும் போது ரசிகர்கள் மெய் மறந்து போவார்கள் என ஏற்பாட்டுக் குழுத் தலைவர் ரத்னகுமார் குறிப்பிட்டார்.

சக்திஶ்ரீ கோபாலனின் குரலில் இந்நிகழ்ச்சியில் ஒரு மேஜிக் காத்திருக்கின்றது எனக் குறிப்பிட்ட அவர், ஹரிச்சரன் – சுவேதா மோகன் கூட்டணியின் படைப்பு ரசிகர்களுக்கு மறக்க முடியாத தருணத்தை ஏற்படுத்துமென்றும் குறிப்பிட்டார்.

மோஜோ எப்போதும் திறமையானவர்களை அடையாளம் காணும். அந்த வரிசையில் நிக்கில் மேத்தியூ தலைசிறந்த படைப்பாளர் என அவர் புகழாரன் சூட்டினார். சனிக்கிழமை மாலை கோலாலம்பூர் கே.டபள்யு.சி. ஸ்டார் எஸ்போ அரங்கில் மோஜோவின் இசை நிகழ்ச்சி சரித்திரம் படைக்குமென்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்ச்சிக்கான டிக்கெட்களை ஏர்ஆசியாரெட்டிக்ஸ்.காம் மூலம் முன்பதிவு செய்யலாம். அல்லது 012-2000505 கைப்பேசி வழி தொடர்பு கொள்ளலாம்.