தனபாலன் அதிரடியில் இறுதி சுற்றுக்குள் நுழைந்தது மலேசியா!

0
5

கோலாலம்பூர், ஆக. 26-

சீ போட்டியின் கால்பந்து விளையாட்டில் அரையிறுதி சுற்றில் இந்தோனிசியாவை எதிர்கொண்ட மலேசியா 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று இறுதி சுற்றுக்குள் நுழைந்தது.

முதல் பகுதி ஆட்டத்தில் இரு அணிகளும் கோல்களை புகுத்தாத நிலையில் பிற்பகுதியாட்டத்தின் 87ஆவது நிமிடத்தில் மலேசியாவின் ஒரே ஒரு வெற்றி கோலை தனபாலன் புகுத்தினார். இந்த சீ விளையாட்டு போட்டியில் தனபாலன் இதுவரையில் 4 கோல்களை புகுத்தியுள்ளார்.

மற்றொரு அரையிறுதி சுற்றில் மியான்மாரை எதிர்கொண்ட தாய்லாந்து 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இதன் வாயிலாக இறுதி சுற்றில் மலேசியாவும் தாய்லாந்தும் மோதவுள்ளன. இந்த ஆட்டம் வருகின்ற 29ஆம் தேதி நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.