திங்கட்கிழமை, ஜனவரி 20, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > மற்றவை > தனியார் கிளினிக்குகளில் கட்டணத்தை உயர்த்தக்கோரி ஆன்லைன் மனு!
மற்றவைமுதன்மைச் செய்திகள்

தனியார் கிளினிக்குகளில் கட்டணத்தை உயர்த்தக்கோரி ஆன்லைன் மனு!

கோலாலம்பூர், நவ.24-

தனியார் கிளினிக்குகளில், நோயாளிகளுக்கு வழங்கப்படும் மருத்துவ ஆலோசனைக்கான கட்டணத்தை தாமதமின்றி, அரசாங்கம் சரி செய்ய வலியுறுத்தி, மலேசிய மருத்துவ சங்கம் (எம்.எம்.ஏ) இணையத்தள மனுவைத் தொடங்கியுள்ளது.

தற்போதைய சூழலில், கிளினிக்குகளை வழிநடத்துவதற்கான செலவுகள் மிக அதிகமாக உள்ளது. குறிப்பாக, கடந்த 5 ஆண்டுகளில், தனியார் கிளினிக்குகளை வழிநடத்துவதற்கான செலவுகள், 10 மடங்கு அதிகரித்திருப்பதாக change.org எனும் அந்த இணையத்தள மனுவில் எம்.எம்.ஏ கூறியுள்ளது.

அந்த காலக்கட்டத்தில், குறைந்தது 500 கிளினிக்குகள் மூடப்பட்டுள்ள நிலையில், தற்போது இருக்கின்ற கிளினிக்குகளும் பல்வேறு சவால்களை எதிர்நோக்கி வருகின்றன.

தற்போது, ஒரு நோயாளிகளிடம்  10 ரிங்கிட் முதல் 35 ரிங்கிட் வரையில் பெறப்படும் ஆலோசனைக் கட்டணத்தை, 30 ரிங்கிட் முதல் 125 ரிங்கிட் வரையில் உயர்த்த வேண்டும் எனவும் எம்.எம்.ஏ பரிந்துரைத்துள்ளது.

பல ஆண்டுகள் நடைபெற்ற பேச்சுவார்த்தைகள், ஆய்வுகளுக்கு பிறகு, அரசாங்கம் 2013ஆம் ஆண்டு அக்கட்டணத்தை சீரமைப்பதற்கான அங்கீகாரத்தை வழங்கியது. ஆயினும், அந்த புதிய கட்டணம் நிர்வாக காரணமாக அரசிதழில் பதிவு செய்யப்படவில்லை.

முக்கியத் தரப்புகளுடன் முடிவில்லா கூட்டங்கள், பேச்சுவார்த்தைகள், விளைவுகள் மீதான ஆய்வு, பக்காத்தான் ஹராப்பான் மற்றும் தேசிய சமூக நல அறவாரியத்திடம் விளக்கமளிப்பு முதலானவற்றை மேற்கொண்டு வந்த போதிலும், இதுவரையில், அரசாங்கம் முடிவு செய்யாமல் உள்ளதாக எம்.எம்.ஏ சங்கம் கூறியுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன